Friday, June 15, 2012

ஸ்ரீ கர்ப்பரக்ஷõம்பிகா ஸ்தோத்ரம் - சுக பிரசவமாக

சுக பிரசவமாக தினமும் சொல்லவேண்டியவை

ஸ்ரீ மாதவீ காந நஸ்தே கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம்    (ஸ்ரீமாதவி)

வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீ ஸ்திதாத்வம்

மாந்யா வரேண்யா வதாந்யா - பாஹி
கர்பஸ் தஜந் தூந் ததாபக்தலோகாந்       (ஸ்ரீமாதவி)

ஸ்ரீ கர்ப்பரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்யயுக்தா ஸீமாங்கல்யகாத்ரீ

தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ரீம் மநோக்ஞாம் பஜேதாம்   (ஸ்ரீமாதவி)

ஆஷாடமாஸேஸூபுண்யே
ஸுக்ரவாரே ஸுகந்தேன கந்தேனலிப்தா

திவ்யாம்பரக கல்பவேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸூத்ருஷ்டா    (ஸ்ரீமாதவி)

கல்யாணசாத்ரீம் நமஸ்யே - வேதி
காட்யஸ்த்ரியா கர்ப்பரக்ஷõகரீம் த்வாம்

பாலைஸ்ஸதா ஸேவிதாம்ங்க்ரீம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது பேதை ருபேதாம்            (ஸ்ரீமாதவி)

பரமோத்ஸ்வே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்

ஸர்வார்த் ததாத்ரீம் பஜேஹம் தேவ
ப்ருந்தை ரபீட்யாம் ஜகன்மாதரம் த்வாம்     (ஸ்ரீமாதவி)

எதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் தீக்ஷி
தாநந்தராமேண தேவ்யாஸ்ஸூது ஷ்ட்யை

நித்யம்படேத்ய ஸ்துபக்த்யா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத் தஸ்யநித்யம் (ஸ்ரீமாதவி).

Thursday, June 14, 2012

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்

அம்பிகையின் அருள் பெற , உறுதுணையாக நிற்கும் சப்த மாதாக்கள் , காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள் பற்றியே..

ப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.  எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்


தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.


வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.


விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

 வாராஹி

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


இந்திராணி:

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.


இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.


தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்


Wednesday, June 13, 2012

ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்!

மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

க மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.

தானங்களும் - அதன் பலன்களும்

1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் - இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம்  (துணி) - சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் - சவுபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.

Tuesday, June 12, 2012

மயிலுக்கு தோகையில் கண் போன்ற அமைப்பு வந்தது எப்படி?

மயில் தோகை விரித்தாடும் அழகைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். நம் வீட்டிற்கு முன் நின்று கரையும் காகங்களுக்கு உணவளித்தால் நம் முன்னோர்களுக்கு அன்னமளிப்பதற்குச் சமம். புராணங்களில் அன்னப்பறவையின் அறிவு மிகவும் போற்றப்படுகின்றது. ஓணான், சாதாரணமாகத் தங்க நிறத்தில் தோன்றும். ஸ்ரீவால்மீகி ராமாயணம் உத்தரகாண்டத்தில் மேற்கூறிய இப்பிராணிகளுக்கு எவ்வாறு தனித்தன்மை வாய்த்தது என்பதற்கான விளக்கம் உள்ளது.

மருத்தன் என்ற அரசர் உசிரபீஜம் என்ற இடத்தில் ஒரு யாகம் நடத்தினார். தேவகுரு பிருகஸ்பதியின் சகோதரர் சம்வர்த்தர் யாகத்தை நடத்த உதவினார். அப்போது ராவணன் அங்கே வந்தான். அவனது அபரிமிதமான பலத்தாலும், பிரம்மாவினால் வழங்கப்பட்ட வரங்களாலும் அவனைக் கண்டு பயந்த தேவர்கள் தங்கள் சொந்த உருவங்களை மறைத்துக் கொண்டு வேறு உருவங்களை எடுத்தனர். இந்திரன் மயில் ஆனான்; யமன் காகம் ஆனான்; குபேரன் ஓணான் ஆனான்; வருணன் அன்னம் ஆனான். அப்போது ராவணன் ஓர் அசுத்தமான நாய் போல யாகம் நடந்த பஞ்சவடிக்குள் நுழைந்தான். ராவண: ப்ராவிசத் யக்ஞம் ஸாரமேய இவா சுசி: என்றார் வால்மீகி. மருத்தனிடம் ராவணன் சென்று அவரைத் தன்னுடன் போரிட அழைத்தான். மருத்தன் அவனை யார் என்று கேட்டார். ராவணன் திமிராக, உன் அறியாமையைக் கண்டு வியப்பாக உள்ளது. அரசே, நான் குபேரனின் சகோதரன். அவனை வென்று நான் இந்தப் புஷ்பக விமானத்தைக் கைப்பற்றினேன் என்றான். அரசனோ, ஓ! மூத்த சகோதரனையே போரில் வென்றவனா நீ? இதுவரை நான் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஏ கொடுமதியானே! எனது அம்புகளால் உன்னை யமனிடம் அனுப்புகிறேன், பார் என்றார். மிகுந்த கோபத்துடன் வில்லேந்தி ராவணனை எதிர்க்கக் கிளம்பினார் மருத்தன். உடனே சம்வர்த்தர் சொன்னார்: அரசே! நான் கூறுவதைக் கேள். மகேஸ்வரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த யாகத்தை அரைகுறையாக விட்டால் உனது வம்சமே அழிந்துவிடும். யாக தீட்சை எடுத்துக் கொண்டவர் போர் புரிவது தகாது. கோபம் கொள்வதும் தகாது. போரில் வெற்றியடைவதும் நிச்சயமல்ல. மேலும் ராவணனைப் போரில் வெல்வது மிகவும் சிரமமானது. மருத்தன் அந்த அறிவுரையை ஏற்று, யாகம் செய்வதில் முனைந்தார். உடனே ராவணனின் மந்திரி சுகன், ராவணன் வென்றான் என்று கொக்கரிக்க, ராவணனும் அங்கிருந்து அகன்றான். 

அவன் சென்ற பிறகு இந்திராதி தேவர்கள் தங்கள் சுய உருவங்களை அடைந்தார்கள். அப்போது இந்திரன் மயிலிடம், உனக்குப் பாம்புகளால் பயம் ஏற்படாது. உன் நீல நிறத்தோகையில் என் ஆயிரம் கண்கள் போன்றதொரு தோற்றம் ஏற்படும். மேகமூட்டத்தின்போது நீ தோகையை விரித்து அழகாக ஆடுவாய் என வரம் தந்தார். வரத்தைப் பெற்ற மயில் கூட்டங்கள் மகிழ்ந்தன. அங்கிருந்த காகத்திடம் யமன், காகமே! நீ எனக்கு மிகவும் திருப்தி தந்துள்ளாய். பிற உயிர்களைப் பாதிக்கும் நோய்கள் உன்னை வருத்தாது. உன்னை மக்களும் கொல்லமாட்டார்கள். நீ மாந்தர்களால் அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டால், அதன் விளைவாக பித்ரு லோகத்திலுள்ள பித்ருக்கள் பசிப்பிணி நீங்குவார்கள் என்றார். அடுத்து, வருண பகவான் அன்னத்திடம், அன்னமே! இனி பூரண சந்திரனை ஒத்ததாக உனது மேனி விளங்கும். உன்னைக் காணும் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும். நல்ல வெண்மையான நுரையைப் போல தனித்தன்மையுடன் நீ விளங்குவாய். எனது சரீரமான நீருடன் நீ இணையும் போது உன் மகிழ்ச்சி ஈடு இணையற்றதாகும் என வரமளித்தார். (இந்த வரம் கிடைப்பதற்கு முன்பு அன்னப்பட்சிகள் வெள்ளை நிறமாக இல்லை. அவற்றின் இறக்கைகளின் நுனி கருமையாகவும், அவற்றின் மார்புப் புறம் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் இருந்ததாம்.) ஒரு பாறையின் மேலிருந்த ஓணானிடம் குபேரன், ஓணானே, இனி உன் உனது கருமை நிறம் மாறிப் பொன் நிறமாகவும் மாறும் என்றார். இவ்வாறு தேவர்கள் வரம் அருளியதால்  இப்பிராணிகளுக்கு தனித்தன்மை வாய்த்ததாக புராணங்கள் கூறுகின்றன.

Monday, June 11, 2012

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

இலிங்காஷ்டகம் - ஸ்லோகமும் பொருளும்.

இலிங்காஷ்டகம் 

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் 
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

 ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் 
ராவண தர்ப வினாஷன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

 காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

 ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

ஸர்வ  ஸுகந்த ஸுலேபித லிங்கம் 
புத்தி விவர்த்தன காரண லிங்கம் 
சித்த சுராசுர வந்தித லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

 கனக மஹாமணி பூஷித லிங்கம் 
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் 
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

 தக்க்ஷ  ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

குங்கும சந்தன லேபித லிங்கம் 
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்
 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் 
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் 
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் 
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் 
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் 
பராத்பரம் பரமாத்மக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே. லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால் சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும் சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.  

நன்றி ஸ்தோத்ரமாலா.

இதிலே கடைசி பதிகமான,

 லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே

சொல்வதை தவிர்க்கவும். இது லிங்கச்டகத்தின் பலனை சொல்லவே ஆகவே ஆலயங்களிலும் சரி பூஜை அறையிலும் சரி இதை சொல்வதை தவிர்த்து மற்ற எட்டு பதிகங்களை மட்டும் துதித்து அவன் அருளால் அவன் அருள் பெறுக. 

Friday, June 8, 2012

ஸந்தியாவந்தனம்

ஆசமனம் : அச்யுதாய நம : அனந்தாய நம : கோவிந்தாய நம:
கேசவ நாராயண கட்டைவிரல் வலது இடது கன்னம்
மாதவ : கோவிந்த பவித்ர விரல் வலது இடது கண்
விஷ்ணூ மதுஸூதன ஆள்காட்டி விரல் வலது இடது மூக்கு
த்ரிவிக்ரம வாமன சுண்டு விரல் வலது இடது காது
ஸ்ரீதர ஹ்ருஷீகேச நடுவிரல் வலது இடது தோள்
பத்மனாப தாமோதர ஐந்து விரல்களும் நாபி தலை

ஸங்கல்பம் : சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே!

ப்ராணாயாமம் :  ஓம் பூ : ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் - ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த (ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்யம் என்று தென்கலையாரும், ஸ்ரீபகவதாக்ஞயயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்று வடகலையாரும்) துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே என்றும் (மத்தியானத்தில்) மாத்யாஹ்னிகம் கரிஷ்யே என்றும் (சாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே, என்றும் சங்கல்பம் செய்த பின் ஓம் என்று பவித்ரவிரலால் ஜலத்தில் எழுதி ஸ்ரீ கேசவாய நம: என்று நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளவும்.

ப்ரோக்ஷண மந்திரம் : ஆபோஹிஷ்டா மயோ புவ: தாந ஊர்ஜே ததாதன, மஹேரணாய சக்ஷஸே, யோவ : சிவதமோ ரஸ: தஸ்ய பாஜயத - இஹந உசதீரிவ - மாதர: தஸ்மா அரங்கமாமவ: யஸ்ய க்ஷயாய ஜின்வத
அபோஜநயதாசன : (இதுவரை சொல்லி ஜலத்தை சிரசில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஓம் பூர்புவஸ்ஸுவ:) இப்போது ஜலத்தைக் கையில் எடுத்து சிரஸை சுற்றிக் கொள்ளவும். வலது கை உள்ளங்கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளவும்.

காலையில் : ஸூர்யஸ்ச்ச மாமன்யுஸ்ச்ச மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம் மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிச்னா, ராத்ரிஸ் ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா - ப்ராசனம், ஆசமனம்.

மத்யான்னத்தில் : ஆப: புனந்து - ப்ருதிவீம் ப்ருதீவி பூதா புனாதுமாம், புனந்து ப்ரஹ்மணஸ்பதி: ப்ரஹ்மபூதாபுனாதுமாம், யதுச் சிஷ்டம் அபோஜ்யம்-யத்வாதுச்சரிதம் மம, ஸர்வம் புனந்து மாமாப: அஸதாம்ச - ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா - ப்ராசனம், ஆசமனம்.

சாயங்காலத்தில் : அக்நிஸ்ச்ச மாமந்யுஸ்ச்ச மன்யுபதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யதஹ்னா பாபமகார்ஷம், மனஸா வாசா ஹஸ்தாப்யாம், பத்ப்யாம், உதரேணசிச்னா, அஹஸ்ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம்மயி, இதமஹம் மாமம்ருத யோளெந ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமிஸ்வாஹா ப்ராசனம், ஆசமனம்.

ப்ரோக்ஷண மந்திரம் : ததிக்ராவிண்ணோ, அகாரிஷம், ஜிஷ்ணோ ரச்வஸ்ய வாஜிந: ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத் ஆபோஹிஷ்டா மயோபுவ: தான ஊர்ஜேததாதன மஹேரணாய சக்ஷஸே யோவச்சிவதமோ ரஸ : தஸ்யபாஜயத - இஹன : உசதீரிவமாதர : தஸ்மா அரங்கமாமவ : யஸ்ய க்ஷயாயஜின்வத ஆபோ ஜனயதாசன : ஓம் பூர்புவஸ்ஸுவ:

அர்க்ய ப்ரதானம் : (காலையில் மூன்று தடவையும், மத்யான்னத்தில் இரண்டு தடவையும், ஸாயங்காலத்தில் மூன்று தடவையும், இரண்டு கைகளிலும் ஜலம் எடுத்துக் கொண்டு பூமியில் விடவும்) மந்திரம் :- ஓம் பூர்புவஸ்ஸுவ: + ப்ரசோதயாத் (என்று அர்க்யம் விடவும்) பிறகு ப்ராணாயாமம் செய்து அர்க்யம் விடவும், கையில் ஜலமெடுத்துக்கொண்டு தன்னைத் தானே பிரதக்ஷிணமாக வந்து அஸாவாதித்யோ ப்ரஹ்ம ப்ரஹ்மைவ அஹமஸ்மி என்று சொல்லி சூரியனை பரப்ரஹ்மஸ்வரூபனென்றும், அந்த ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே தானிருப்பதாகவும் தியானித்துக் கொள்ள வேண்டியது. ஆசமனம்.


நவக்ரஹ கேசவாதி தர்ப்பணம் :
ஆதித்யம் தர்ப்பயாமி
ஸோமம் தர்ப்பயாமி
அங்காரகம் தர்ப்பயாமி
புதம் தர்ப்பயாமி
ப்ரஹஸ்பதிம் தர்ப்பயாமி
சுக்ரம் தர்ப்பயாமி
சனைச்சரம் தர்ப்பயாமி
ராஹும் தர்ப்பயாமி
கேதும் தர்ப்பயாமி
கேசவம் தர்ப்பயாமி

நாராயணம் தர்ப்பயாமி
மாதவம் தர்ப்பயாமி
கோவிந்தம் தர்ப்பயாமி
விஷ்ணும் தர்ப்பயாமி
மதுஸூதனம் தர்ப்பயாமி
த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி
வாமனம் தர்ப்பயாமி
ஸ்ரீதரம் தர்ப்பயாமி
ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி
பத்மநாபம் தர்ப்பயாமி
தாமோதரம் தர்ப்பயாமி

ஆசமனம் 2 தடவை.