Monday, March 12, 2012

எங்கும் கடன்.. எதிலும் கடன்.. கடன் பிரச்சனை தீர செல்ல வேண்டிய கோயில்கள்!

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன்பிரச்சனையால் பாதிக்கப்படாதவர் என யாருமே இருக்கமுடியாது. ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப கண்டிப்பாக மற்றவரிடம் கடன்பட்டிருப்போம்.  செலவுக்கேற்ற வருமானம் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருப்பவரே அதிகம். கடன்பிரச்சனையையும், நிதி நெருக்கடியையும் ஓரளவு சமாளித்து, நிம்மதியாக வாழ அனைவரும் செல்லவேண்டிய கோயில்கள்

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்

இத்தகைய தலங்களில் உள்ள இறைவன் பிறவிக்கடனை தீர்த்து வைக்க கூடியவர். இவரிடம் சென்று நாம் வாங்கிய கடனை தீர்க்க வழிபட்டால் கடன் பிரச்சனைக்கு வழி கிடைக்குமே தவிர, கடனே தீராது. எனவே சக்திக்கு மீறி கடன் வாங்க கூடாது. 


Wednesday, March 7, 2012

அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்

ஆஸ்த்மா நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் சமநிலையில் இருக்கும். நன்கு கனிந்த பூவன் வாழைப்பழத்துடன் சீரகத்தைச் சேர்த்துப் பிசைந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். நீரிழிவிற்குப் பேயன் பழம் நல்ல மருந்து, பேயன் பழத்தோடு சீரகத்தூளும் வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் பொடி, நெய் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் நீரிழிவு நீங்கும். கண்பார்வை தெளிவடைய தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

தண்ணீர்: உடலில் ஏற்படும் கழிவுகளை நீக்கப் போதுமான அளவு நல்ல குடிநீர் பயன்படுகிறது. காலை பல் தேய்த்ததும், வெறும் வயிற்றில் நான்கு டம்ளர் தண்ணீர் அருந்தியபின் ஒருமணி நேரம் வேறு உணவுகள் உண்ணாதிருந்தால் இரவு உள்ள உணவு நன்கு ஜீரணமான நிலையில் உடல் கழிவுகள் சிறுநீர் மற்றும் மலமாக வெளிப்பட்டு உடல் கழிவுகள் தேங்கி விஷத்தன்மை அடையாமல் சுத்தமடையும். உணவுக்கு முன்போ, பின்போ அருந்தும் தண்ணீர் அவ்வாறு பயன்படுவதில்லை என்பதல்லாமல் ஜீரணத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. வயிற்றில் உணவு அமினோ அமிலங்களினால் ஜீரணிக்கப்படுகிறது. அதிகப் படியான நீர் அவ்வகை அமிலங்களை நீர்த்து விடச் செய்வதினால் ஜீரணம் குறைபாடடைகிறது. உணவு உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து தாகம் இல்லாவிட்டாலும் இரண்டு டம்ளர் தண்ணீர் பருகினால் ஜீரணத்திற்கு அந்த நீர் இடைஞ்சல் தராமல் உதவி புரியும்.

உடலில் அதிக ப்ளூரைடு சேரக் கூடாது. உங்கள் வீட்டுக்குடிநீரை (கிணற்று நீர், போர் மூலம் எடுக்கப்படும் நீர்) டெஸ்ட் செய்து அதில் எவ்வளவு ப்ளூரைடு உள்ளது என்பதைச் சோதனை செய்து கொள்வது நல்லது. அதிக ப்ளூரைடு தண்ணீரில் இருந்தால் அதைக் குடிக்கும் குழந்தைகளுக்கு எலும்பு, பற்கள், குடல் மூளை, இரத்தக் குழாய், தோல், சிறுநீரகப்பாதை ஆகியவை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வேண்டிய அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகாமல் தடுத்துக் கொள்ளலாம். நமக்கு ஆற்றல் உண்டாவதைத் தீர்மானிப்பதில் தண்ணீர் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நமது உடலில் 70 முதல் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. குடல்கள், நுரையீரல், மூளை ஆகிய பாகங்களில் ஏற்படும் வறட்சியினால் (டீஹைட்ரேசன்) பல நோய்கள் உண்டாகின்றன. குடல்களில் ஏற்படும் நீர் வறட்சி, மலச்சிக்கல், கல்லீரல், சிறு நீரகக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது

திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் விருந்து கொடுக்கவும், விருந்து சாப்பிடவும் சிறந்தவை. மற்ற நாட்களில் விருந்து அளித்தாலோ, சாப்பிட்டாலோ மனச்சுமை உண்டாகும் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?

நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

யாருக்கு கடவுள் தரிசனம் தருவார்?

கடவுள் உங்கள் ஊருக்கு வரப்போகிறார். இந்த அசரீரி ஒலியைக்கேட்டதும், மக்கள் அனைவரும் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஊர் எல்லைக்கு ஓடினார்கள். அனைவரும் வழிமேல் விழிவைத்து  கடவுளுக்காகக் காத்திருந்தனர், ஒரே ஒரு வேலைக்காரச் சிறுமி மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தானுண்டு தன் வேலை உண்டு என வீட்டு வேலையை கவனமாக பார்த்து கொண்டிருந்தாள்.

கொஞ்சநேரத்தில் காற்றைப் போல், கதிரொளியைப் போல் முதியவர் ஒருவர் உதித்தார் ஊருக்குள்! வெறிச்சோடிக் கிடந்த வீதிகளில் வலம் வந்தார். ஆளரவமற்ற வீடுகளைப் பார்த்துப் புன்னகைத்தார். மெல்ல நடந்தார். ஒரு வீட்டுக்குள்ளிலிருந்து மட்டும் பாத்திரம் உருட்டும் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்தார் முதியவர். கடமை உண்ர்ச்சியுடன் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரச் சிறுமி. சின்னப் பெண்ணை வாஞ்சையோடு அருகே அழைத்தார் முதியவர். அளவான ஆசையையும், அளவற்ற ஆசியையும் கொடுத்தார். ஊரார் வந்ததும், நான் என் கடமையைச் செய்து கொண்டிருந்தால், கடவுள் எனக்கு தரிசனம் தந்தார் எனக்கூறு..! என்று சொல்லிவிட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மறைந்தார். யார் தன் கடமையைச் சரியாக செய்கிறார்களோ அவர்களுக்கு கடவுள் தரிசனம் தருவார்.

Tuesday, March 6, 2012

வேலை கிடைக்க உதவிடும் மந்திரம்:

வேலை கிடைக்க உதவிடும் மந்திரம்:

ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ

மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற


பயம் நீங்கி தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கான பலன்கள்!

முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மாணவர்கள் மிகவும் பதட்டத்துடனும், ஒருவித பயத்துடனும் தேர்வை எதிர்நோக்குவார்கள். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ராசிக்குரிய தெய்வத்தை மனதார வழிபட்டால் பதட்டமும், பயமும் நீங்கி சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிகமதிப்பெண் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.

மேஷம்: இயற்கையாகவே எதிலும் அவசரமாக செயலாற்றும் அவசரப் புத்திக்காரர்களாகிய நீங்கள், நிதானமாக வினாக்களைப் படித்து புரிந்து கொண்டு விடையளிப்பது அவசியம். ராசிகிரகத்தில் செவ்வாய் மற்றும் குரு ஆகிய இருவரும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். புதனின் நிலையும் சாதகமாக இருப்பதால் வேகமாக எழுதும் திறனைப் பெற்று சிறப்பாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற சரஸ்வதியை வணங்கி கூற வேண்டிய ஸ்லோகம்:

ஸரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மேஸதா

ரிஷபம் : எந்த ஒரு செயலும் அழகாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் குணமுடைய நீங்கள் விடைத் தாளை அழகாக அலங்கரிப்பீர்கள். முக்கியமான விடைகளை பல வண்ணங்களில் அடிக்கோடிட்டு காட்டுவது உங்களின் சிறப்பு குணம். ராசிநாதன் சுக்ரன் 12ம் இடத்தில் குரு பகவானோடு இணைந்திருப்பதும், வித்யாஸ்தானத்தில் 12ம் அதிபதி செவ்வாய் அமர்வதால் தேர்வு நேரத்தில் சரியான விடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சற்று சிரமங்கள் ஏற்படும். தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விநாயகப்பெருமானை வழிபட்டால் தெளிவான விடைகளை அளிப்பதில் வல்லவராக விளங்குவீர்கள் என்பது உறுதி. நீங்கள் கூறவேண்டிய ஸ்லோகம் :

வக்ர துண்ட மகாகாய
சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷுஸர்வதா

மிதுனம் : எதையும் மதிநுட்பமாக ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் குணமுடைய நீங்கள், தேர்வின்போது கேள்விக்குறிய விடைகளை வளவளவென்று நீண்ட பதிலாக எழுதாமல் தேவையானதை மட்டும் சரியான அளவில் எழுதுங்கள். உங்கள் ராசிக்குரிய கிரகநிலையால் தேர்வு சமயத்தில் நேரப்பற்றாக் குறையினால் சற்றே அவதிப்பட நேரிடலாம். தேர்விற்கு முன்னதாக நடைபெறும் மாதிரித்தேர்வுகளை எழுதி கால வரம்பினை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சரஸ்வதியை வணங்கி நீங்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதி ஸ்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்

கடகம் :  வெளிப்படையாக தேர்வைப் பற்றிய பயம் இல்லை என்று காட்டிக் கொண்டாலும் உள்மனதில் ஒரு வித படபடப்பான உணர்வுடன் இருப்பீர்கள். எழுத்து வன்மையைத் தரும் புத பகவான் மார்ச் மாதத்தின் இறுதி வரை எட்டாம் இடத்தில் அமர்வது நன்மையைத் தராது. நான்காம் இடமாகிய வித்யா ஸ்தானத்தில் அர்த்தாஷ்ட சனியின் தொந்தரவும் இணைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க தன்னம்பிக்கையும், அயராத <உழைப்பும் அவசியம். ஆஞ்சநேயரை வணங்கி நீங்கள் கூற வேண்டிய ஸ்லோகம் :

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரதூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

சிம்மம் :  குரு பகவானின் நேரடி பார்வையைப் பெற்றிருப்பதால் உங்களின் ஞாபக சக்தி மிக நன்றாக இருக்கும். ஒரு முறை படித்தாலே மனதில் ஆழமாக பதியும் அளவுக்கு ஞாபகசக்தி இருக்கும். மார்ச் 14ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும்படி வினாத்தாள் அமையாமல் போகலாம். மற்ற கிரகங்களின் துணையும் தளராத மனமும் கொண்டிருப்பதால் சிறப்பாகத் தேர்வெழுதி வெற்றி பெறுவீர்கள். சூரிய நாராயணனை வழிபட்டு அவருக்குரிய ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கி வாருங்கள்.

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ
குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்õரங்முக:
சத்ருர் பார்க்கவ ஸெளரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ
மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

கன்னி : சிரமமான கிரகநிலைகள் நிலவுவதால் எழுதும் வலிமையினைத் தருகின்ற மூன்றாம் இடத்தில் ராகுவும், அதிபதி செவ்வாய் 12லும் அமர்ந்திருப்பதால் சற்று நிதானமில்லாமல் செயல்படும் வாய்ப்பு உருவாகலாம். கேள்வி எண்ணைத் தவறாகக் குறிப்பிடுவது, தவறான விடைஎழுதுவது போன்ற அவசர புத்தியோடு செயல்படுகின்ற தவறுகள் நேரக்கூடும். இருப்பினும் ஆஞ்சநேயரை மனதார வணங்கி நவகிரகங்களின் ஆதரவோடு, தேர்வினில் சிறப்பான மதிப்பெண்களை அடைவீர்கள். நீங்கள் கூறவேண்டிய ஸ்லோகம்

ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

துலாம் :  ஜென்மச்சனியின் ஆதிக்கம் பெற்றிருந்தாலும், நான்காம் இடமாகிய வித்யா ஸ்தானத்திற்கு அதிபதி சனி பகவானே என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. அவரது உச்சபலத்தால் கல்வி நிலையில் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். குரு பகவானின் துணையுடன், ராசிநாதன் சுக்ரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் <உங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவது நிச்சயம். முழுமனதுடன் சூரியபகவானை வணங்கி நீங்கள் சொல்லி வர வேண்டிய ஸ்லோகம் :

ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்

விருச்சிகம் :  ஏழரை சனியின் ஆதிக்கத்தால் நீங்கள் தேர்வினில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். குரு பகவான் ஆறில் இருப்பது சாதகமற்ற நிலையாகினும், எழுத்து வலிமையைத் தரக்கூடிய புதபகவான் உங்களுக்குத் துணை நிற்கிறார். பாடங்களைப் பல முறை படித்து எழுதிப்பார்ப்பதன் மூலம் மனதில் நன்றாக பதியும். தேர்வு நேரத்தில் பெரும் உதவியாய் இருக்கும். புதபகவானை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தினமும் காலையில் 21 முறை படித்து வர வெற்றி உண்டாகும்.

ஸெளம்ய: பீத உதங்முகஸ்ஸமிதபாமார்கோ (அ)த்ரிகோத்ரோத்பவோ
பாணோசாநகத: ஸூஹ்ருத் ரவிஸூதோ வைரீக்ருதாநுஷ்ணருக்
கந்யாயுக்மபதிர் தசாஷ்டம சதுஷ் ஷண்ணேத்ரக: சோபநோ
விஷ்ண்வாராதந தர்ப்பிதோ மகதப: குர்யாத் ஸதாமங்களம்

தனுசு : உங்கள் ராசிநாதன் குரு பகவானாக இருப்பதால் தேர்வு நேரத்தில் நிலவுகின்ற கிரகங்களின் சஞ்சார நிலை சிறப்பான பலன்களைத் தரும். நேரத்தை வீணாக்காமல் நன்றாகப் படித்தால் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவதோடு நினைத்தபடியே மேற்படிப்பும் கிடைக்கும் என்பது உறுதி. வாழ்வில் சிறந்து விளங்க தட்சிணாமூர்த்தியை வணங்கி நீங்கள் சொல்லி வர வேண்டிய ஸ்லோகம்:

மூலேவடஸ்ய முனிபுங்கவ ஸேவ்யமானம்
முத்ராவிசேஷ முகுளீக்ருத பாணிபத்மம்
மந்தஸ்மிதம் மதுரவேஷ முதாரமாத்யம்
தேஜஸ்ததஸ்து ஹ்ருதிமே தருணேந்து சூடம்

மகரம் : உங்கள் உயர்விற்குப் பெரிதும் பக்கபலமாக சனிபகவான், குருபகவான், புதபகவான் துணை நிற்கிறார்கள். தேர்வில் வேகமாக எழுதுவதுடன் கேள்விக்குரிய பதிலை சரியான வகையில் வெளிப்படுத்துவதில் தனி கவனம் செலுத்துவீர்கள். குறிப்பிட்ட கேள்விகளுக்குரிய விடைகளை மட்டும் படிக்காமல் எல்லாப் பாடங்களையும் படிப்பது நல்லது. சுப்ரமணிய சுவாமியை தினமும் வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைக் கூறுவதல் மூலம் நல்ல மதிப்பெண்களை அடைவீர்கள்.

திவ்யதுநீம கரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகி நஸ்தவம்
ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ நதாரங்க:

கும்பம் : மாணவர்கள் தேர்வினில் சிறப்பான மதிப்பெண்களோடு தேர்ச்சி காண ராசிநாதன் சனி, புத்திகாரகன் புதன், நல்லறிவினைத் தரும் குரு ஆகியோர் சாதகமாக துணைபுரிவார்கள்.  எழுத்து வலிமையைக் குறிக்கும் மூன்றாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களுக்குக் கூடுதல் பலம் கிடைக்கும். கேள்விக்குரிய பதிலை சுருக்கமாக, அதே நேரத்தில் சரியாக விடையளிக்க வேண்டும். தேவையற்ற வகையில் அதிகமாக எழுதுவதால் நேரப்பற்றாக்குறை உண்டாகலாம். புதபகவானை வழிபட்டு கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை தினமும் 18 முறை சொல்லி வர தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெறுவது உறுதி.

ஸிம்மாரூடம் சதுர் பாஹும்
கட்கசர்ம கதா தரம்
ஸோமபுத்ரம் மஹா ஸெளம்யம்
த்யாயேத் ஸர்வார்த்த ஸித்திதம்

மீனம் : அஷ்டமத்துச் சனியுடன் புத்திகாரகன்
 புதனின் சாதகமற்ற சஞ்சாரமும் உங்களுக்குச் சற்று சிரமத்தினைத் தோற்றுவிக்கலாம். ஞாபகமறதியும், கேள்விக்குரிய சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பதில் சிறு குழப்பமும் தோன்றக்கூடும். தேர்விற்கு முன்னதாக அதிக அளவில் எழுத்துப் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் நீங்கள் கோட்டை விடும் வாய்ப்பும் உண்டு. தேர்வு நேரத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை தினமும் காலையில் 12 முறை படித்து வர தேர்வின் போது அதிக நன்மைகள் உண்டாகும்.

சின்முத்ராக்ருதி முக்தாபாணி நளினம்
சித்தே ஸிவம குர்மஹே.
கபர்தினம் சந்த்ரகளாவதம்ஸம்
த்ரிணேத்ரமிந்துப்ரதிமானநோஜ்வலம்
சதுர்புஜம் க்ஞானதமக்ஷüத்ர புஸ்தாக்னி
ஹஸ்தம் ஹ்ருதிபாவயேச்சிவம்.

Sunday, March 4, 2012

பூஜை இல்லாவிடில்..

    பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - தீபாராதனை 5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?

 பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.

. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும். 2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும். 3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும். 4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும். 5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும். 6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும். 7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். 8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும். 9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும். 10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.