துர்க்காதேவி ஒருத்தி என்றாலும், அவள் ஒன்பது வகைகளில் தெய்வங்களுக்கும்,
பக்தர்களுக்கும் உதவியிருக்கிறாள். இன்றும், நமக்கு பாதுகாப்பாக நின்று
அருளுகிறாள். எனவே, இவளை ஒன்பது வடிவங்களாகக் கருதி ஓம் வனதுர்க்கையே நம:
ஓம் சூலினி துர்க்கையே நம: என்று ஒன்பது துர்க்கைகளுக்குரிய
மந்திரத்தையும், நாளொன்றுக்கு ஒரு துர்க்கைக்குரிய மந்திரம் வீதம் 108 முறை
சொல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் காரணமற்ற பயம் நீங்கும்.
1. வன துர்க்கை: பிறவிப் பெருங்காட்டை அழிப்பவள்
2. சூலினி துர்க்கை: திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3. ஜாதவேதோ துர்க்கை: முருகன் உதித்தபோது அக்னிக்கும் வாயுவுக்கும் அருளியவள்
4. ஜுவாலா துர்க்கை: பண்டாசுரனை வதம் புரிய அனல் பிழம்பாகி அரண் அமைத்தவள்
5. சாந்தி துர்க்கை: தட்ச யாகத்தின் போது கோபமடைந்த சிவனை சாந்தப்படுத்தியவள்
6. சபரி துர்க்கை: அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன் வேட்டுவச்சி வடிவில் சென்றவள்
7. தீப துர்க்கை: பக்தர்களுக்கு ஒளியாய் நின்று உதவுபவள்
8. ஆசுரி துர்க்கை: அமுதம் கிடைக்க திருமாலுக்கு உதவியவள்
9. லவண துர்க்கை: லவணன் என்ற அசுரனை சத்ருக்கனன் வென்று வர உதவியவள்.

No comments:
Post a Comment