பிரதோஷ விரதம் இருப்பவர்கள், சிவன் கோயிலில் வலம் வரும் போது,
சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கும் கோமுகம் வரை வந்து திரும்பி விடுவார்கள்.
இந்த கோமுகத்தை சோமசூத்ரம் என்பர். இதனால், இப்படி வலம் வருவதை சோமசூத்ர
பிரதட்சணம் என்பர். சோம என்றால் வடக்கு. சிவனுக்கு அபிஷேகம் செய்யும்
பொருட்கள், சந்நிதியின் வடக்கே இருக்கும் கோமுகத்தின் வழியாக வெளியேறும்.
சிவனுக்கு அபிஷேகம் செய்யும் அத்தனை பொருளும் சண்டிகேஸ்வரருக்கு உரியது
என்பதால், கோமுகம் அருகில் சண்டிகேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார்.
அவர் ஆழ்ந்த சிவ தியானத்தில் இருப்பார் என்பதால், அவருக்கு இடையூறில்லாமல்,
பிரதோஷ வேளையில் அவருக்கு இடைஞ்சலின்றி, அவரை வணங்கி விட்டு திரும்பி விட
வேண்டும்.
No comments:
Post a Comment