Thursday, August 9, 2012

ஆடி கிருத்திகை


ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது
என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது.
ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும்.
அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய
முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. கந்தனைக் கார்த்திகைப்
பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை தினமே கார்த்திகேயனுக்கு
உரியதாகிவிட்டது. ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள்
எடுத்தும், அலகு குத்தியும், பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை
ஆராதிப்பார்கள். பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே
அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன்
கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை
வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது
ஐதிகம்.




































No comments:

Post a Comment