ஆண்டாள் முகம் பார்த்த கண்ணாடி: ஆண்டாள், ரெங்கமன்
னாரை நினைத்து தினமும் மாலையை சூடிக்கொள் வார். தான் அணிந்த மாலை
எப்படியிருக்கிறது என இங்கிருந்த கிணற்று நீரை பயன்படுத்தியுள்ளார்.
அக்கிணறு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூலஸ் தானத்தின் முன்புறம்
இக்கிணறு உள்ளது. இக்கிணற்றை கண்ணாடி கிணறு என அழைக்கின்றனர்.
-ஜானகிராமன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
மறுமையில் இன்பம் அடையும் வழியுண்டு: பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஏழாவது ஆழ்வாராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் தான் பெரியாழ்வார். பெரியதொரு நந்தவனம் அமைத்து வடபெருங்கோயில் உடையானுககு திருமாலை கட்டிச்சாற்றி வந்தார். அக்காலத்தில் ஸ்ரீவல்லப தேவன் என்னும் அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண் டிய நாட்டை ஆண்டு வந்தான். ஒரு நாள் நகர சோதனைக்கு சென்ற போது ஒரு வீட்டுத்திண்ணையில் உறங்கும் ஒரு அந்தணரைக் கண்டார். அவர் மூலம் "மறுமையில் இன்பம் அடைய, இப்பிறப்பிலே முயற்சி செய்ய வேண்டும் என்ற விசயத்தைப்புரிந்து கொண் டார். அரசனும் தன் புரோகிதரான செல்வநம்பியிடம் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என்று கேட்க, அவரிடம் வித்வான்களைக் கூட்டி பரம் பொருளைப்பற்றி நிர்ணயம் செய்வித்து அவ்வழியாலே பேறு பெற வேண்டும் என்று சொல்ல, அரசனும் இசைந்து பெருந்தனத்தை ஒரு வஸ்திரத்தில் முடிந்து ஒரு தோரணத்திலே கட்டச் செய்தார். பரதத்வ நிர்ணயம் செய்பவர், இப்பொற்கிழியைப் பரிசாகப் பெறலாம் என்று வித்வான்களுக்கு அறிவித்தார். வடபெருங்கோயிலுடையான் விஷ்ணு சித்தருடைய கனவில் தோன்றினார். நாமேபரம தெய்வம் என்று நிர்ணயம் செய்து, நீர்போய் பொற்கிழியை அறுத்துக் கொண்டு வா என்றார். விஷ்ணு சித்தரின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார். கனவு கலைந்தது. மறுநாள் அரசபை சென்றார் விஷ்ணு சித்தர். அங்கு ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள் என்றார். பொற்கிழி இவர் முன்னே தான தாழ வளைந்து தந்தது. அப்பொற்கிழியை அறுத்து வசப்படுத்தினார். ஸ்ரீவல்லப தேவன், ஆழ்வாரை தனது பட்டத்து யானை மேலேற்றி வலம் வரச் செய்தார். இவருக்கு ஸ்ரீமத்நாரயாணன், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிகளுடன் காட்சி தந்தார். விஷ்ணு சித்தரை பெரியாழ்வார் என அழைத்தார். பொற்கிழியுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பணிகள் பல செய்தார். நந்தவனம் அமைத்து பூக்களைக் கொண்டு திருமாலை கட்டி கடவுளை வணங்கினார். ஆண்டாளை கண்டெடுத்து வளர்த்தார். திருப்பாவை, நாச்சியார் திருமொழியை உலகுய்யப்ப பாடுவதற் கும் காரணமாயிருந்தது. அவரை அரங்கனுக்கே அர்ப்பணித்த பெருமையுடையராவார்.
- ஏ.எம்.எம். ராதா சங்கர், பர்வீனு இண்டஸ்ட்ரீஸ், ராஜபாளையம்.
ஸ்ரீராமானுஜரை வரவேற்கும் ஆண்டாள்: கோயில் மூலஸ்தானத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கருட வாகனத்தில் எழுந்தரு ளியுள்ளனர். இது பிரணவத்தின் பிரதி பிம்பமாக அகர, உகர, மகார தத்துவ விளக்கத்தை காட் டுவதாகும். கர்ப்ப கிரகத்தை விட சிறிது தூரம் எழுந்தருளி யுள்ளனர். இதன் ஐதீகம் ஸ்ரீராமானுஜர், ஆண்டாளை சேவிக்க வந்தார். அவரை ஆண்டாள் வரவேற்க வந்ததை குறிக்கும் வகையில் இது உள்ளது. ஸ்ரீரங்க மன் னாரின் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தன்று காலையில் ஸ்ரீலட் சுமி நாராயணன் சன்னதிக் கருக்கே உள்ள மண்டபத் தில் ஸ்ரீஆண்டாள் எழுந் தருளி பக்தர் களுக்கு அருள் பாலிப்பார்.
-எஸ்.என். பாலசுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம் திருஷ்டிக்காக பாடிய பாடல்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சினார். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று துவங்கி "திருப்பல்லாண்டு பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், "நீரே பக்தியில் பெரியவர் என வாழ்த்தினார். அதுவரையில் "விட்டுசித்தன் (விஷ்ணு சித்தர்)என்று அழைக்கப்பட்ட இவர், "பெரியாழ்வார் என்னும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் பாடப்படுகிறது.
திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்?
ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் இதுதான். ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின்போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது. அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது.
108 கம்பளி: கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபாலவிலாசத்திற்கு எழுந்தருள்கின்றனர். அப்போது இம்மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துகின்றனர். குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
பாவை நோன்பு: பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.
கன்னிகாதானம்: பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்கு செல்கிறார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவழியினர் சேர்ந்து கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பின் ரங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கிக்கொள்கிறார்.
திருமாளிகை: ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோயிலாக இருக்கிறது. இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீர் கொடுத்தாராம். எனவே, இக்கோயிலை "நாச்சியார் திருமாளிகை என்று சொல்கிறார்கள்.
முத்துப்பந்தல்: ஆண்டாள் சந்நிதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், "முத்துப்பந்தல் எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது.
மாப்பிள்ளை அலங்காரம்: திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது பேண்ட், சட்டை அணிந்து வருவர். இதுபோல இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் மட்டுமே இவர் வேஷ்டி அணிந்திருப்பார்.
தமிழக அரசு சின்னம்: ஸ்ரீவில்லிபுத்தூர் வட
பெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார். 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர், ""திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம் என மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக குறிப்பிட்டு பாடியுள்ளார். பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இக்கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை. சிலைகள் இல்லாமல், தமிழர்களின் கட்டடக்கலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததும், இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இடம்பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது.
ஆண்டாள் பாடிய பாசுரங்கள்: ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.
பெருமாள் பெயர் சூட்டிய பெரியாழ்வார்: பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார் என்று பெயர் சூட்டினார்.
பூமியைக் காட்டிய அம்பாள்: ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.
ராஜாங்க கோலம்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.
கருடாழ்வாரின் மூன்று பதவி: கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.
முப்புரிஊட்டிய தலம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் (சுயம்பு) ஆகிய மூன்று பேர் அவதரித்த பெருமையுடையது. எனவே, இத்தலத்தை "முப்புரிஊட்டியதலம் என்கின்றனர். திவ்யதேசங்களில் புனிதமான தலமாகவும் கருதப்படுகிறது.
108 திவ்யதேச சுவாமிகள்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவுறுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.
நீதியை நிலைநாட்டிய ஆண்டாள்: துவாபர யுகத்தின் முடிவில் பாரத யுத்தத்திற்கு பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் அவதார காரியங்கள் முடிந்து பகவான் பரந்தாமன் வைகுண் டத்திற்கு புறப்பட்டார். அப்போது தன் பக்தர்களையும் உத்தமர்களையும், சாதுக்களையும் அழைத்து, "துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க, அதர்மத்தை அழித்து தர்மத்தை காத்து, அநீதியை அழித்து நீதியை நிலைநாட்ட நான் எடுத்த அவதாரக் காரியம் முடிந்தது. இனி முனிவர்களும் சான்றோர்களும் குருபரம்பரையினர்களும் தோன்றி நம் திருவருளைப் பெற்று மக்கள் கலியின் பிடியிலிருந்து நீங்கி சமுதாயம் விடுதலைப் பெற்று இன்புற்று வாழ வழிக்காட்டுவார்கள் என்ற அருளிச் செய்தார்.அதற்கு ஏற்பவே ஆழ்வார்கள் தோன்றி பக்தியில் ஆழ்ந்து பரந்தாமனின் கல்யாண குணங்களையும் அவன் திருநாமங்களையும் பாசுரங்களாக பாடி உலகம் உய்ய செய்தனர். அவர்களில் ஆண்டாள் அருள் செய்த அமுதமொழிகளை நாம் பாடியும், கேட்டும் மகிழலாம். அதற்காகவே ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. அந்த நாட்களில் அறிஞர்களும், பாகவதர்களும் ஆண்டாளின் அமுத மொழிகளை பாடியும், கேட்டும், மகிழும் வாய்ப்பாக ஆடிப்பூரத்திருவிழா அமைந்துள்ளது.
- கே.சேகர், ஸ்ரீமாடன் ஏஜென்சி, ஸ்ரீவி.,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமை: அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான். மட்டுமின்றி இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள். இவ்வூரை, "கோதை பிறந்த ஊர், "கோவிந்தன் வாழும் ஊர் என்றும் சிறப்பித்து சொல்வர். ஆகவே, 108 திவ்யதேசங்களில் இல்லாத பெருமை இத்தலத்திற்கு கிடைத்துள்ளது.
ஆண்டாளுக்காக தனி விழாக்கள்: கோயில் மூலஸ்தானத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கருட வாகனத்தில் எழுந்தரு ளியுள்ளனர். இது பிரணவத்தின் பிரதி பிம்பமாக அகர, உகர, மகார தத்துவ விளக்கத்தை காட் டுவதாகும். கர்ப்ப கிரகத்தை விட சிறிது தூரம் எழுந்தருளி யுள்ளனர். இதன் ஐதீகம் ஸ்ரீராமானுஜர், ஆண்டாளை சேவிக்க வந்தார். அவரை ஆண்டாள் வரவேற்க வந்ததை குறிக்கும் வகையில் இது உள்ளது. ஸ்ரீரங்க மன் னாரின் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தன்று காலையில் ஸ்ரீலட் சுமி நாராயணன் சன்னதிக் கருக்கே உள்ள மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் எழுந் தருளி பக்தர் களுக்கு அருள் பாலிப்பார். ஸ்ரீ ரெங்க மன்னார் நீங்கலாக ஆண் டாளுக்கு மட்டும் தனித்து சில விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.
- திருவேங்கட ராமானுஜதாஸ், ஸ்ரீவித்யா கல்லூரி சேர்மன், விருதுநகர்
பச்சைப் பரத்தல்: வில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை, "பச்சைப்பரத்தல் என்பர். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். திருமணம் முடிக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள். அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.
உன்னதமான பசியாற்றல்: அன்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதை அதிகமாக வெளிப்படுத்துவதும், புரிந்து கொள்வதும் மனிதர்களால் மட்டுமே முடியும். இப்படிப்பட்ட அன்பும், பரிவும் பல வழிகளில் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இதில் சரீர, ஒத்தாசை, தன, தான்ய உபகாரம் போன்றவை அடக்கம். இவற்றினால் மக்களுக்கு தற்காலிக சந்தோஷம், திருப்தி கிடைக்கும். நாம் செய்யும் பொருளுதவியால் அதை பெறுபவர்கள், வாழ்த்தும் வாழ்த்தானது முழுமனதுடன் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதே சமயம் ஒருவருக்கு வயிறார உணவு அளித்தால் அதன் பின் அவர்கள் வாழ்த்தும் வாழ்த்தை என்னவென்று சொல்வது. "வயிறார வாழ்த்தினார் என்பதை சற்று அலசிப் பார்க்கும் போது முழுவதுமாக நிறைவு பெற்ற வயிற்றில் வேறு எதுவும் செல்லாது. எனவே மனதும் முழு திருப்தி அடைகிறது. எனவே பசியாற்றுதல் என்பது ஒரு உன்னதமான காரியமாகும்.
- டி.கலசலிங்கம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் சேர்மன்.
3 வாசலுடன் பெருமாள்: இத்தலத்திலுள்ள மூலவர் வடபத்ரசாயி பெருமாளை தரிசனம் செய்ய பிரதான வாசல்கள் தவிர மேலும் இரண்டு வாசல்கள் இருக்கிறது. சுவாமியின் திருமுகம், திருப்பாதம் தரிசிக்க கருவறையில் இரண்டு பகுதிகளில் இரண்டு வாசல்கள் உள்ளது. ஆனால், சுவாமியை பிரதான வாசலில் இருந்தே முழுமையாக தரிசிக்கலாம் என்பதால், இவ்வாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை.
உயிர் பெற்ற தேர் சிற்பங்கள்: ஆண்டவனையே தன் பால் காதல் கொள்ள வைத்து ,தன்னை ஆட் கொள்ள மண்ணுக்கு வரவழைத்த அற்புத பெண்ணான ஆண்டாள் ஆடி மாதத்தில் அவதரித்தாள். ஸ்ரீவி.,யில் 9 பெரிய கரங்கள் தேரின் ஓட்டத்திற்கு உறுதுணை யாக உள்ளன. இவற்றை எந்த வரிசையில் இருந்து பார்த்தாலும் 9 என்ற எண் வரும். இதேபோல் தேர் இழுக்க மாட்டப்படும் வடமும் ஒன்பது. ராமாயண மகாபாரத கதைகளோடு திருவிளையாடல் புராணக் காட்சிகளும் தேரில் இடம் பெற்றுள் ளன. வைணவ, சைவ ஒற்றுமைக்கு இந்த தேர் எடுத்துக்காட்டாகும். மகா விஷ்ணு தனக்குரிய பலவித மான வாகனங்களில் வருவது போலவும், மதுரை மீனாட் சியம்மனும், சொக்கரும், தங்களுடைய வாகனங்களில் வரு வது போலவும் காட்சிகள் சிற்பி யின் கைத்திறனால் உயிர் பெற்று காட்சியளிக்கின்றன.
-பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, ராம்கோ குரூப்சேர்மன், இராஜபாளையம்.
தவக்கோல வடிவில் அர்ச்சுனன்: ஆண்டாள் கோயிலின் திருக் கல்யாண மண்டபத்தில்ஏராளமான தொன்மையான ராமாயண ஓவியங்களை காணலாம். லட்சுமணன், ராமன், வீணை ஏந்திய கலைமகள், அகோர வீரபத்திரர், தி, வேணுகோபாலன், விஸ்வகர்மா, நடனமாது, சமுத்திர குமாரன் மகன் ஜலந்தரன், மோகினி சிலைகள் உண்டு. கண்ணாடி மாளிகை எதிரே உள்ள தூண்களில் அன் னத்தின் மீது ரதி, நீர்த்துவ முக வீரபத்திரர், கிருஷ்ணனின் தேரோட்டி, நாக பாணத்தை கையேலேந்திய கர்ணன், மன்மதன், ஊர்த்துவ வீரபத்திரர், தாரை தப்பட்டையுடன் குகன், தவக்கோல வடிவில் அர்சுனன் சிலைகளும் உள்ளன.
- முத்து பட்டர்
ஆண்டாள் அருள் பெறுவோம்: கண்ணனை நினைத்து மார்கழி மாதம் ஆண்டாள், 30 நாட்கள், 30 திருப்பாவை பாடல்களை பாடினாள். பின்பு இறைவனை நினைத்து நாச்சியார் திருமொழி என்ற பாசுரங்களையும் பாடினாள். ஆண்டாள் பிறந்த ஆடி பூரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை புரட்டாசி மாதம் ஐந்தாம் திருவிழா கருடசேவையன்று திருப்பதி எழுமலையான் அணிந்து கொள்கிறார். சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியன்று அழகர் மதுரையில் ஆற்றில் இறங்கும் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குகிறார். தெய்வீக மணம் கமழும் ஸ்ரீவி., ஸ்ரீஆண்டாள் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டுஆண்டாள் அருள் பெற அழைக்கின்றோம்.
-செ.பாலகிருஷ்ணன், சுந்தரேஸ்வரி பி.எட்., கல்லூரி.
விரும்பியவர் கணவராக பாவை நோன்பு: பெண்கள் விரும்பிய மாணாளனை அடைய பாவை நோன்பு இருக்க வேண்டும். பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் ஆண்டாள், பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பினாள். அதற்காக கண்ணனை மண முடிக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த பெருமாள், பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டார். பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது பெரியாழ்வார் தன் வீட்டிற்க செல்லும் போது அவரது வம்சாவழியினர் சேர்ந்து இரண்டு கலசத்தில் தீர்த்தம் எடுத்து கொண்டு ரங்க மன்னாருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி கன்னிகா தானம் செய்து கொடுக்கிறார். பின் ரெங்க மன்னார் ஆண்டாளக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கி கொள்கிறார். ஆகவே பாவையர் தாங்கள் விரும்பிய கணவரை கைபிடிக்க பாவை நோன்பு இருத்தல் அவசியமாகும்.
வி.பி.எம்.சங்கர்,வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள்தலைவர், ஸ்ரீவி.,
திருப்பாவை விமானத்தின் சிறப்பு : கண் கவரும் விமான சிற்பங்கள்: மார்கழி மாதம் நோன்பிருந்த ஆண்டாள் திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினார். மார்கழி மாத 30 நாளுக்குமான 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். இதனை குறிக்கும் வகையில் ஆண்டாள் கோயில் விமானத்தின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. படுக்கையில் தூங்கி கொண்டிருக்கும் தோழியர்களை ஆண்டாள் எழுப்புவது, அவர்களை அழைப்பது என பல சிற்பங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. திருப்பாவை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதால் இதனை "திருப்பாவை விமானம் என்றே பெயர் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசிக்க வருபவர்கள் இம் விமானத்தை தரிசித்தால் திருப்பாவை பாடிய அருளை பெறுவர்.
ஆர்.சத்திய மணி,சக்தி டிராவல்ஸ், சக்தி குரூப்ஸ் நிறுவனங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஏலே ஆண்டாளு: திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை "ஏலே!. ஸ்ரீவி., திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக "ஏலே என்ற வார்த்தை ஸ்ரீவி.,யிலும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை "எல்லே என்று இருந்ததாம். இவ்வார்த்தையைக் குறிப்பிட்டு திருப்பாவையில் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள். எல்லே என்ற செய்யுள் வார்த்தையே திரிந்து "ஏலே என ஆனது. இப்பகுதியில் குழந்தைகளை ஆணாயினும், பெண்ணாயினும் "ஏலே என செல்லமாக அழைப்பர். பெரியவர்களிடையே சண்டை வந்துவிட்டால், வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில், "ஏலே! உன்னை கவனிச்சுகிறேமுலே என்று சொல்வது நெல்லை மக்களின் வழக்கம்.
-எஸ்.கார்த்திக், மேனகா கார்ட்ஸ், ஸ்ரீவி.,
கோதை கண்ட தமிழ்ப்பாதை: அரங்கனை ஆட்கொண்டதால் கோதை, "ஆண்டாள் என்ற திருநாமத்துடன் சூடிக் கொடுத்த சுடர் கொடியானாள். பூமாலை சூடிக் கொடுத்த ஆண்டாள் பாமாலை சூட்டவும் தவறவில்லை. வடமொழிச் சொல்லை கலவாமல் தூய தமிழில் திருப்பாவை, திருமொழி பாடல்களை தமிழுக்கு இலக்கணமாகத் தந்தருளிய ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ளார் என்பது நாம் செய்த பாக்கியமே.
திருப்பாவை பாசுரங்கள் அத்தனையும் தூய்மையான, ஆழமான பக்தி நிறைந்தவை. நாச்சியார் திருமொழியோ கவிதானுபவமும், கற்பனை வளமும் நிறைந்து காணப்படுகிறது. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களுக்கென்று ஒரு பக்தி நோன்பு இருக்குமானால் அது ஆண்டாள் தொடுத்த திருப்பாவை ஒன்று தான். தமிழ் பேசத் தெரியாத வடமொழி மாநிலங்களிலும், நேபாளம், கர்நாடகா, ஆந்திர மாநில வைணவ கோயில்களில், வழிபாட்டின் போது தமிழ் உச்சரிப்பு மாறாமல் இந்த திருப்பாவை சொல்லப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்தியவர் "ஸ்ரீ ராமானுஜர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று தேர்த்திருநாள். பார் போற்றும் பாவை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரெங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருளி ஸ்ரீவி., ரத வீதிகளில் பவனி வரும் பொன்னாள். இந்நன்னாளில் நாம் ஆண்டாளை வணங்கி அவர் அருள் கிடைக்க பிரார்த்திப்பதோடு தினமும் திருப்பாவை பாடல்களில் ஒன்றையாவது பாடி, மகிழ கேட்டுக் கொள்கிறேன். - எஸ்.ராஜேஸ்கனி,வி.ஏ. டிரேடர்ஸ், ஸ்ரீவி.,
ஆண்டாளுக்கு கிளி ஏன்?
கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு. புத்திசாலியான பெண் குழந்தை வேண்டுமா? ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார், லட்சுமி நாராயணரை தன் குலதெய்வமாக வழிபட்டார். இவர் வழிபட்ட நாராயணர், ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார். தன் இடது மடியில் லட்சுமியை அமர வைத்தபடி இருக்கும் இவர், சுதை சிற்பமாக இருக்கிறார். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது. பல வர்ணங்களுடன் இருப்பதால் இவரை, "வர்ணகலாபேரர் என அழைக்கின்றனர். இவரது சந்நிதி, மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அம்சம். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஆண்டாள் போலவே பக்தியும் அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தைகள் பிறக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. லட்சுமிநாராயணர் உற்சவர், ஆண்டாள் கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவரை சாதாரண நாட்களில் தரிசிக்க முடியாது.
பெருமாள் அருகில் கருடாழ்வார்: பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார். ஆண்டாள் திருமணத்தின்போது, கருடாழ்வார் சுவாமியை ஸ்ரீரங்கத்திலிருந்து அழைத்து வந்தார். இதனாலும், மாப்பிள்ளை தோழனாகவும், எப்போதும் பெருமாள், தாயாரை வணங்க விருப்பப்பட்டதாலும் அருகில் இருப்பதாகவும், அவருக்கு மரியாதை செய்யும்விதமாக இவ்வாறு நிற்பதாகவும் சொல்வர்.
கிளி செய்யும் முறை: இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.
கீர்த்தி தரும் ஆண்டாள்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.
வளையல், மஞ்சள்கயிறு பிரசாதம்: திருமணமாகாத பெண்கள் இங்கு கண்ணாடி கிணறை சுற்றி வந்து வேண்டிக்கொள்கிறார்கள். துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
மாலையில் சேர்க்கப்படும் பூக்கள்: ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது. இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர்மாலை கொடுத்தனுப்புகின்றனர்.
சூடிக் கொடுத்த நாச்சியார்: ஆடி மாதம் ஸ்ரீவி., நகரம் தனி பெருமையை சூடிக் கொள்ளும். ஆண்டாள், ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வார், நந்தவனத்தில் துளசி மாடத்தில் ஆண்டாளை குழந்தையாக எடுத்து வளர்த்து வந்தார். மங்கையான ஆண்டாள், கண்ணன் மீது பற்றுக் கொண்டு, அவர் மீது காதல் கொண்டு, அவனையே மணவாளனாக நினைத்தாள். இறைவனுக்கு அணிவிக்க பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையே ஆண்டாள் சூடி, கிணற்றில் தன் அழகை பார்த்தாள். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே இறைவனும் அணிந்து கொண்டார். சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.
- முருகதாஸ், டால்பின் கம்ப்யூட்டர்ஸ், ஸ்ரீவி.,
அழகு பார்த்த ஆண்டாள்: திருமகளாய் சூடிக்கொடுத்த சுடர் கொடியான ஸ்ரீ ஆண்டாள் அவதாரம் செய்த புண்ணிய பூமியாக விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர்.பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு துளசிச் செடியின் அடியில் கலிபிறந்து 98 நிகழ்ந்த நள வருடத்தில் ஆடிமாதம் 8ம் தேதி செவ்வாய்க் கிழமை கூடிய பூரநட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள். கோதை தம் தந்தையாகிய பெரியாழ்வார் வடபெருங்கோவிலுடையானுக்குச் சாற்றுவதற்காக தொடுத்து வைத்திருந்த பூமாலைகளை எடுத்து அணிந்து கொண்டு, தாம் கண்ணபிரானுக்கு ஏற்ற மணப் பெண் தானா? என்று அழகு பார்க்க, இதனை அறிந்த பெரியாழ்வார் மிகவும் மனம் வருந்தியவராய் அம்மாலைகளை எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் இருந்தார்.அன்று ஆழ்வாரின் கனவில் எம்பெருமான் தோன்றி தமக்கு கோதை சூடிக்களைந்த மாலையே சிறப்பு என்று கூற அன்று முதல் கோதை "ஆண்டாள் என்றும் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் அழைக்கப்பட்டார். இன்று ஆண்டாள் - ரெங்கமன்னார் தேரில் அமர்ந்து வீதி உலா வருகின்றனர்.
- ஏ.ஆர்.லட்சுமணன்

No comments:
Post a Comment