Sunday, June 17, 2012

தாரகமந்திரம் என்றால் என்ன?

* ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக்
கொண்டிருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும். அப்படியே மந்திரங்களை
அப்பியாசம்(பயிற்சி) செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரியசக்தி
குறைந்து விடும்.




* நம்முடைய துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக்
கொண்டிருக்கிறோம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ
மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி
செய்ய நினைக்க வேண்டும்.



* தர்மம் செய்ய நினைத்தால் பலன்களை

எதிர்பார்த்து செய்யக் கூடாது. யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது நம்
வேலையல்ல. அது ஈஸ்வரன் வேலை என்கிறது உபநிஷதம்.
* இயற்கையில்





மாறுதலுக்கு உட்படாதது என்று எதுவுமே இல்லை. சகலமும் மாறிக்கொண்டே தான்
இருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. மலையும்,
சமுத்திரமும் கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன.
* ராம






நாமத்தை தாரக மந்திரம் என்று குறிப்பிடுவார்கள். "தாரகம்' என்றால்
"பாவங்களைப் பொசுக்கி மேன்மைப்படுத்துவது' என்று பொருள். அதனால் நேரம்
கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை விடாது ஜெபியுங்கள்.





















No comments:

Post a Comment