அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் நாளை மறுநாள் மாலை மலரவிருக்கின்றது. இதனை எதிர்கொள்ள இறுதிக்கட்ட பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் வர்த்தகர்களும் பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர். மலிவு விற்பனை ஒருபுறம் ஏட்டிக்குப் போட்டியாக நடக்க மறுபுறம் வீதியோர வியாபாரம் மட்டுமன்றி வீதிக்கு வீதி மக்களின் காலடியிலும் வியாபாரம் நடைபெற்று வருகின்றது.
புதுவருட பிறப்பு பற்றி வழமை போல் வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணித பஞ்சாங்கமும் இருவேறு கணிப்புகளைத் தந்துள்ளன.
அதன் விபரம் வருமாறு,
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13 ஆம் திகதி இரவு 6.30 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கமோ நாளை மறுநாள் 13 ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு பிறப்பதாக கணித்துள்ளது. அன்று பிற்பகல் 3.48 மணி தொடக்கம் இரவு 11.48 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசுக்கு வேப்பம் இலையும் காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும் புதுவருடத்தில் இராசி ரீதியான வரவு செலவு எவ்வாறு அமையும் என்பதில் இரு பஞ்சாங்கங்களின் கணிப்பும் ஒரே மாதிரியாக காணப்படுகின்றன. அதன் விபரத்தை கீழே பார்க்கலாம்.
இராசி வரவு செலவு
(பங்கு) (பங்கு)
மேடம் 2 8
இடபம் 11 14
மிதுனம் 14 11
கடகம் 14 2
சிம்மம் 11 5
கன்னி 14 11
துலாம் 11 14
விருச்சிகம் 2 8
தனு 5 14
மகரம் 8 8
கும்பம் 8 8
மீனம் 5 14

No comments:
Post a Comment