சாகாவரம் தரக்கூடிய அமிர்தத்தை பெறவேண்டி திருப்பாற் கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வந்தது. மகாவிஷ்ணு மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கினார். ஆனால் ராகு தேவரைப்போல் உருவம் தரித்தான். சூரிய, சந்திரர்கள் இதை மோகினிக்கு உணர்த்தினர். உடனே அவர் அந்த அரக்கனின் தலையை கொய்து விட்டார். ஆனால் அதற்குள் அமிர்தம் கழுத்துவரை சென்றுவிட்டது. இதனால் அவன் சாகவில்லை. தலை ராகு என்றும், உடல் கேது எனவும் அழைக்கப்பட்டனர். இதற்கு பழி வாங்குவதற்காக தான் ராகுவும், கேதுவும் அவ்வப்போது சூரியனையும் சந்திரனையும் மறைக்கின்றனர்.
சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர் கோட்டில் வரும் போது நடுவில் சந்திரனோ, பூமியோ வரும்போது சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. கிரகணகாலத்தில் சாப்பிடக்கூடாது. கிரகணம் விட்டபின் சந்திரனையோ, சூரியனையோ பார்த்தபின் தான் உணவு உட்கொள்ள வேண்டும். கிரகணத்தின் போது சூரியனையோ, சந்திரனையோ கர்ப்பமான பெண்கள் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் பிறக்க போகும் குழந்தைகள் உடல் ஊனமுள்ளவர்களாக பிறக்கக்கூடும்.

No comments:
Post a Comment