பெண்மையின் கனிந்த நிலையே தாய்மை. சுயநலம் சிறிதும் இன்றி, தன் குடும்பம், குழந்தைகள் என்ற அன்பு உணர்வோடு பெற்ற தாய் இருப்பது போல, உலகம் என்னும் குடும்பத்தின் தாயாக இருப்பவள் அம்பிகை. அன்பு, கருணை, பொறுமை,தியாகம், சத்தியம், தர்மம் என எல்லா நற்குண ங்களின் சேர்க்கை அவள். பெண்ணுக்கே தைரியம் அதிகம். அதனால் காவல் தெய்வங்களாக காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன் என்னும் பெயர்களில் அம்பிகையை வழிபடுகிறோம். சுவாமியே இல்லாமல், அம்பாள் மட்டும் தனித்திருக்கும் கோவில்களும் நம் நாட்டில் நிறைய உள்ளன.
No comments:
Post a Comment