ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமம். இது மொத்தம் 56 மணி நேரம். அதாவது இரண்டே கால் நாட்கள் நீடிக்கும். இதுபற்றி பயப்பட வேண்டாம். மாதத்திற்கு ஒருமுறை தான் இது வரும். இந்த சமயத்தில் மனதில் கோபத்தை உண்டாக்கும் சூழல் உண்டாகும். வீண் சண்டை, சச்சரவு ஏற்படும். செய்ய வேண்டியது விநாயகர் வழிபாடு. செய்யக் கூடாதது புதிய முயற்சி, சுபவிஷயம், விருந்து உபசரிப்பு ஆகியன. மவுனத்தைக் கடைபிடித்தால் பிரச்னை குறையும். அன்று உங்கள் கடமைகளைச் செய்யும் முன் பெற்ற தாயிடம் ஆசி பெறுவதும், குலதெய்வத்தை வழிபடுவதும் சிறந்த பரிகாரங்களாகும்.
Saturday, March 15, 2014
காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?
இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:
காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.
பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம், 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன், 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி, 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு, 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம்,10.கவய தீர்த்தம்,11.கவாட்ச தீர்த்தம்,12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.

ஈசன் என்பதன் பொருள் தெரியுமா?
ஈசன் என்ற சொல்லுக்கு அரசன், ஆள்பவன்,இறைவன், மூத்தவன், கடவுள், குரு, தலைவன் என பல பொருள்கள் உண்டு. உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார். அவருடைய இடப்பாகத்தில் இடம் பெற்றிருக்கும் தேவிக்கு ஈஸ்வரி, ஈசானி, ஈசி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. சிவனுக்குரியநட்சத்திரமான திருவாதிரையை ஈசன் நாள் என்பர். அவர் விரும்பி அணியும் கொன்றை மாலைக்கு ஈசன் தார் என்று பெயர். சிவன் உறைந்திருக்கும் கைலாய மலை ஈசான மேரு எனப்படும். தன்னை நம்பி வந்தவருக்கு, அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகை குணமும்கொண்டவர் என்பதால், இவரை ஈசன் என்பர்.
Tuesday, March 4, 2014
தாலிக்கயிற்றில் தொங்கவிடக்கூடாதது என்ன?
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.
தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?
தண்ணீருக்கு ஹச்o2 என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில் தான் முதன் முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராணவாயு ஒரு பங்கும், இன்னொரு வாயு(ஹைடிரஜன்) இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள். பாருங்க! நம்ம வேதங்களில் இருக்கிற கருத்தைத்தான், வெளிநாட்டார் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் ஆன்மிகத்தை அறிந்து கொள்ள மறுக்கும் தன்மையால் விளைந்த கொடுமை இது!
பயம் நீங்க யாரை வழிபட வேண்டும்?
வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களால் ஏற்படும் பயம் நீங்க, பைரவரை வழிபட வேண்டும். சீர்காழி திருத்தலத்தில் அருளும் சட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் அருளும் அகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்பார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும். காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர், பாதாள பைரவர். கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்னதாக இந்த பைரவர்களை வழிபட, பணிகள் தடையின்றித் தொடரும் என்பது நம்பிக்கை. பழநி மலை அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளியுள்ளார். இவர் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மூர்த்தி ஆவார். சேலம் சிருங்கேரி மடத்தில் பாரதி தீர்த்த சுவாமிகளால் யந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக அருளும் இவர் சாந்நித்தியம் மிகுந்தவர். மேலும், இங்குள்ள காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் அருளும் கால பைரவரைத் தரிசித்து வழிபடுவதும் விசேஷம்!
சென்னை -திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ஏழு பைரவர் சன்னதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சாற்றி, மனதார வழிபட, தீயசக்திகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்; சத்ரு பயம் அகலும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

கோபத்தை விட கொடுமை உண்டா?
இறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவன் என்று சொன்னால், நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கோபத்திற்கு, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று, எந்த பேதமும் இல்லை அரை விநாடியில் கோபப்பட்டு, ஆயுள் முழுவதும் துயரப்படுவோர் நம்மில் அநேகர் உண்டு. கோபத்தின் கொடுமையை விளக்கும் கதை இது: கலியுகம் துவங்கும் நேரம். காமன், கோபன் எனும் இருவர் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டியங்காரன், காமனின் குணாதிசயங்களை விவரித்துக் கொண்டு வந்தான். காமனுக்கு அடிபணியாத உயிர்கள் இல்லை; அவன், பெரும் பெரும் முனிவர்களைக் கூட, வசப்படுத்தி இருக்கிறான். அப்பேற்பட்ட சக்தி படைத்தவன்... என்று, காமனின் ஆற்றலை கூறினான். அப்போது கட்டியங்காரனின் அருகில் இருந்த கோபன், கட்டியங்காரனின் பேச்சை யாரும் நம்பாதீர்கள். சின்னஞ்சிறு குழந்தைகளிடம், காமனின் ஆட்டம் செல்லாது. நோயாளிகள் மற்றும் முதியவர்கள், ஆகியோரிடமும் காமனின் ஆற்றல் அடிபட்டு போய் விடும். ஆனால், கோபனான என் சக்தி தான் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். ஆண், பெண், படித்தவன், படிக்காதவன், பெரியவன் - சிறியவன், ஏழை - பணக்காரன், நோயாளி- ஆரோக்கியசாலி என, அனைவரையும் ஆட்டிப் படைப்பேன். மா முனிவர்களை கூட ஆட்டிப் படைத்து, அவர்களின் தவ ஆற்றலை தள்ளாட வைத்திருக்கிறேன். எனக்கு கால நேரம், இடம், பொருள் என்பதெல்லாம் கிடையாது. தாய் - தாரம், தகப்பன் - பிள்ளை, குரு - சிஷ்யன் என, எல்லா பேதங்களையும் அடித்து நொறுக்கி, அனைவரையும் குப்பையாக்குபவன் நான். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனவன் காமன். ஆகையால், காமனை விட கோபனான நான் தான் பெரியவன்... என்று, சொல்லி முடித்தான். உண்மை தானே... கோபத்தை விட, கொடுமை உண்டா? சற்று அமைதியாக இருக்கும் போது, கோபத்தின் கொடுமையை, அதனால், ஏற்படும் விளைவை யோசித்தால், கோபம் கொள்வது சரியா, தவறா என்பது நமக்கே புரியும்.
Subscribe to:
Posts (Atom)