தர்மபுரி காமாட்சி மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கையை ராஜதுர்க்கை
என்றும் அழைக்கிறார்கள். அவளுக்கு சாற்றிய மாலையை திருமணத்தடை
உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள். அவர்கள் அந்த மாலையுடன் மூன்று முறை கோயிலை
வலம் வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் நாக கன்னியர் அருகே அம்மாலையை ஒன்பது
துண்டுகளாக்கிப் போட்டுவிடுவார்கள். பிறகு ராஜதுர்க்கையை மீண்டும்
பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும்
என்பது ஐதீகம்!
No comments:
Post a Comment