உயிர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் சூரியன், சந்திரன், மற்றும்
அஷ்டதிக்கு பாலகர்கள் (எட்டுதிசை காவலர்கள்) கண்காணித்துக் கொண்டு
இருப்பதாக மகாபாரதம் கூறுகிறது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,
வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரே அஷ்டதிக்கு பாலகர்கள். இவர்களில் இந்திரனை
வழிபட்டால் செல்வவளம் உண்டாகும். அக்னியை வழிபட்டால் தோற்றப்பொலிவு
சிறக்கும். தர்ம வடிவான எமனை வழிபட்டவர்க்கு தீவினை அகலும். நிருதியை
வேண்டிக்கொண்டால் பகைவர் பயம் நீங்கும். வருணனை வணங்கினால் நல்ல மழை
பொழிவதோடு, விவசாயம் செழித்தோங்கும். வாயுவை சிந்திக்க நீண்ட ஆயுளும்,
ஆரோக்கியமும் நிலைக்கும். குபேரனை துதித்தால் சுகபோக வாழ்வு அமையும். மங்கள
வடிவமான ஈசானனை வணங்கினால் அஞ்ஞானம் நீங்கி உயிர் மோட்சகதியை அடையும்.
மற்ற யுகங்களில் எல்லா வழிபாடுகளும் முறையாக நடந்ததால், எல்லாரும்
எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ்ந்தனர். இந்த கலியுகத்தில், லட்சுமியோடு
சேர்ந்திருக்கும் குபேர வழிபாடு மட்டுமே உருப்படியாக நடக்கிறது. ஒன்றிரண்டு
இடங்களில் மழைக்காக வருணஜெபம் செய்கின்றனர். எல்லா வழிபாடுகளும்
உருப்படியாக நடக்க ஆன்மிக அமைப்புகள் முயற்சி எடுத்தால், நாட்டில் நல்லது
நடக்கும்.
No comments:
Post a Comment