Thursday, August 15, 2013

உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் பத்திரகாளியம்மன்,ஸ்ரீவில்லிபுத்தூர்

உங்களது எல்லா பிரச்னைகளையும் போக்கும் பத்திரகாளி
கலி என்றால் துன்பம் என்று பொருள்.கலியுகம் என்றால் துன்பயுகம் என்றுதான் அர்த்தம்.பிறக்காத குழந்தையும்,இறந்து போன மனிதனும் தான் நிம்மதியாக வாழ்பவர்கள்.அவர்களை விட நிம்மதியாக வாழ்ந்து வருபவர்கள் தான் பத்திரகாளியை வழிபடுபவர்கள்.
இந்தியா,தமிழ்நாடு மாநிலம்,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் ஊருக்குள் உள்ளது முதலியார்பட்டித்தெரு.அங்கே,மக்கள் வசிப்பிடத்துக்கு நடுவே அமைந்துள்ளது ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில்!
முதலியார்பட்டித் தெரு நெசவாளர்கள் வாழும் பகுதியாகும்.அங்கே சில நூற்றாண்டுகளாக அமர்ந்து கேட்ட வரம் த்ருபவள் பத்திரகாளி!!


உங்களுக்கு தீராத கடன் அல்லது நோய் அல்லது செலவு அல்லது எதிரிகள் உள்ளதா?இவை அனைத்தும் தீர வேண்டுமா?
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.இந்த பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தினமும் நேரில் வந்து வழிபடுங்கள்.வழிபட்டபின்னர் நேராக உங்களது வீட்டிற்குச் செல்லுங்கள்.இப்படி ஒருவருடம் வந்து வழிபடவும்.உங்களது சகல பிரச்னைகளும் தீரும்.
நீங்கள் முதல் நாள் இங்கு வந்து பத்திரகாளியை வழிபட்டுவிட்டுப் போனதும்-24 மணிநேரத்திற்குள் ஒரு அதிசய சம்பவம் உங்களது வாழ்வில் நடக்கும்.அது எப்படி நடந்தது ? என்று உங்களது பகுத்தறிவால் புலனாய்வு செய்து பாருங்கள்.விடை கிடைக்காது.இந்த பத்திரகாளியை வழிபட்டதால் தான் அந்த அதிசயம் நடந்தது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.
சரி! விருதுநகர் மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு தினமும் வரமுடியும்.மற்ற மாவட்டங்கள்,மாநிலங்கள்,நாடுகளைச் சேர்ந்தவர்களால் எப்படி தினமும் வர முடியும்?
அவர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் போதும்.
ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10.30 மணிக்கு பவுர்ணமி பூஜை துவங்கி நள்ளிரவு 1.20க்கு நிறைவடைகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருட சிவராத்திரியன்றும் கொதிக்கும் நெய்யில் ஒரு 60 வயது பாட்டி வெறும் கையால் பணியாரம் சுட்டுவருகிறார்.கடந்த 30 வருடங்களாக இந்தக் காரியத்தைச் செய்து வருகிறார்.அந்த பாட்டியின் கையில் சிறு மாற்றம் கூட இருப்பதில்லை.கரண்டியைப் பயன்படுத்துவதில்லை.ஒரு முறை நேரில் வந்து பார்க்கவும்.இந்த பத்திரகாளி நிகழ்த்தும் அதிசயங்கள்

No comments:

Post a Comment