Sunday, June 9, 2013

ஆண்களுக்கு,பெண்கள் விரைவில் திருமணம் நடக்க

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க

1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.

2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.

3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை
செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.

ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம

இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெற ÷
வண்டும். திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு
முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.

நாமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:

இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு
மணம் கைகூடும்.

துளஸீமே சிரப்பது
பலம் பங்கஜ தாரிணி
த்ரி செனமே பத்ம நயனா
ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
கிறாணம் சுகந்தா மேபாது
முகஞ்ச சுமுகீ மம
ஸகந்தென கல்ஹாரிணீ பாது
ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
புஷ்பதா மத்மயம் பாது
நாபிம் ஸெளபாக்ய தாயிணி
கடிதம் குண்டலனி பாது
ஊரு வாத வந்திதா
ஜெனனீ ஜானுனீ பாது
ஐஸ்கே சகல வந்திதம்
நாராயணப் ப்ரியே பாது
ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
ஸங்கடே விடிமே துர்கே
பயே வாதே மஹா ஹவே
ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
துளஸீ ஸர்வத ஸதா
இதீதம் பரமம் குஹ்யம்
துளஸ்யா கவசம் முதா
துளஸீ கானனே திஷ்டன்
ஆஸீ னோவா ஜபேத்யதி
ஸர்வவான் காமான் அவாப் னோத
விஷ்ணு சாயுஜ்ய முச்யதி

எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.


நல்ல வரன் அமைய மந்திரம்

அபிராமி அந்தாதி பதிகம்

அதிசயமான வடிவுடை
யாள் அரவிந்த மெல்லாம்
துதிசய ஆனன சுந்தர
வல்லி துணை இரதி
பதிசய மானது அபசய
மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோவாம
பாகத்தை வவ்வியதே

தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.
அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில்
அமர்ந்தருளினாள்.


திருமணம் நிறைவேற மந்திரம்

திங்கட்பகவின்மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.

பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அ
பிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும்
வாய்க்குமோ.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்க

சில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க
கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.

1. ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய
ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே
விதிசதமகாத்யா திவிஷத:

2. கராளம் பத் க்ஷவேளம்
கபளித வத: கால கலநா
நசம்போ: தந்மூலம்தவ
ஜனநி தாடங்க மஹிமா

(அமிர்தத்தைச் சாப்பிட்டும் தேவர்கள் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். உன்னுடைய தாடங்க மகிமையால்தான் விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவில்லை.

சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõம்பிகை ஸ்தோத்திரம்

அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.

ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம்  (ஸ்ரீ)

வாதபீதடே வாமபாகே - வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான்  (ஸ்ரீ)

ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்  (ஸ்ரீ)

ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா  (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம்  (ஸ்ரீ)

ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம்  (ஸ்ரீ)

ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்:  (ஸ்ரீ)

தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ஸ்லோகம்

இது சாவித்திரிஸ்ரீ, சாவித்திரி தேவியை பூஜித்து நமஸ்கரித்து பிரார்த்தித்த ஸ்லோகம். காலையில் தினமும் ஜெபிக்க வேண்டியது. கவனமாகப் படித்து பிழையி
ல்லாமல் சொல்லவும்.

ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே

பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே

புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே

தீர்க்க சௌமாங்கல்யம் பெற

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.

ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;

உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.

மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி

துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட
வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி
யாவது அறிந்தனமே.

அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.

இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.

ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திரு
வடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.

நல்ல குழந்தைகளாக வளர

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே

மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும்
அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள்
தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே!

ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே

அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு
ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !

குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ
கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த
செல்வமோ தாமரைத் திருவடிகள்.

கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ

வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே

திருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இத
யத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்÷
டா?

கல்யாண சித்தி பெற மந்திரம்

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து
அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.
தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.

இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா

மந்திரம்

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:

ஹ்ருதயாதி-ந்யாஸ
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்

தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத

தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

நரசிம்ம மந்திரம்

அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
உக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய
ர÷க்ஷõகணம்: ஜாநுந்யஸ்த கராம்புஜம்
த்ரிநயனம் ரத்நோல்லஸத் பூஷணம்
பாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
வக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்
லம்-பிருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
அம்-ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம்-வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
வம்-அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம்-ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமீ

மூலமந்திரம்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம்! ந்ருஸிம்மம் பீஷணம்
பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்

துக்கம் விலக மந்திரம்

துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம். ÷க்ஷமம் வருவது நிஜம்

சௌபாக்கிய லட்சுமி

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம்,
ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி
அம்மாளை ஜெபிக்கிறேன்.

நன்றி:
வன்னிவிநாயகர் புத்தக நிலையம், மதுரை.








 

வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?

சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இது ஆன்மிக காரணம். அறிவியல் காரணமும் இதற்கு உண்டு. தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன. சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும். அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும். அங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவி யிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும்.  வாழை மரத்திற்கு எத்தனையோ மருத்துவகுணங்கள் உண்டு. வாழைப்பட்டைக்கு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு. பாம்பு கடிக்கு அந்தக்காலத்தில் வாழைத்தண்டு சாறை மருந்தாகக் கொடுப்பர். பற்கள் ஒன்றோடொன்று கிட்டிக் கொண்டு சிலர், திறக்க முடியாமல் சிரமப்படுவர். இதற்கு வாழைத்தண்டு சாற்றைக் கொடுத்து குணப்படுத்துவர்.  வாழைப்பூ, காய், பழம், நார், பட்டை, தண்டு என்று அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகின்றன. வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் வளரும். இலையில் இருக்கும் சத்துக்கள், சூடான உணவோடு கலந்து உடம்புக்குள் செல்வதால், தோலில் திரை( சுருக்கம்) ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

Friday, June 7, 2013

அகத்தியர்

தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன்.

ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.
தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர்.

இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.
இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.


மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.

குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.

அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.

ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.
பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள்.

தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.

லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.
ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது.

கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.
பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது.

அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

தியானச் செய்யுள்
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்
காலம்
அகத்தியர் முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4 யுகம் 48 நாள் ஆகும்.

வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருப்பது ஏன்?

விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை.

Wednesday, June 5, 2013

கல்யாண யோகம் வந்தாச்சா!

ஒருவருக்கு திருமணம் நடப்பதை நிர்ணயிப்பவர் குரு. நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபடும் ஒருவரது ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர், இவருக்கு வியாழ நோக்கம் வர இன்னும் இவ்வளவு காலம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள், என்பார். குரு இருக்கும் ராசியை விட, அவர் பார்க்கும் ராசிகளுக்கே பலன் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்பர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பரிபூரணமான சுபகிரகம் ஆகும். இந்த கிரகத்தின் 5,7,9 ஆகிய பார்வைகள் முக்கியமானவை. இந்த பெயர்ச்சி காலத்தில், மிதுனத்தில் இருந்து 5,7,9 பார்வையால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினருக்கு ஓராண்டு காலத்தில் திருமண யோகம் உண்டு. திருமணம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம், நல்ல குடும்பம், சொத்து வாங்குதல், பொன்பொருள் சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களையும் குரு பார்வை தரும்.

ஞான குரு: நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இங்கு குரு, சிவனை வழிபட்டுள்ளார். இவருக்கு ஞான தெட்சிணாமூர்த்தி என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு விசேஷமாக நடக்கும். போன்: 04374 269 407

குருவித்துறை குரு: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சந்நிதியில் குருவும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். குருவுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். குரு பெயர்ச்சியை ஒட்டி மே26ல் துவங்கி 3 நாட்கள் லட்சார்ச்சனை நடக்கிறது. போன்: 99656 70975, 97902 95795.

தென்குடித்திட்டை குரு: தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குருபகவான் தனி விமானத்துடன் கூடிய சந்நிதியில் காட்சி தருகிறார். ராஜயோகம் தருபவர் என்பதால் ராஜகுரு என்கின்றனர். தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். போன்: 04362 252 858.

ஆமையில் அமர்ந்த குரு: குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது திருச்செந்தூர். அசுரர்களுடன் போரிட முருகப்பெருமான் இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தி, கூர்மம் (ஆமை), அஷ்டநாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன.

சிவனுக்கு கொண்டைக்கடலை: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர், வியாழனுக்குரிய அதிபதியாக அருளுகிறார். அகத்தியரின் சீடரான உரோமச முனிவருக்கு, சிவன் குரு அம்சமாக இருந்து காட்சி கொடுத்த தலம். இந்த சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுவர். கோயில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இதை தட்சிண கங்கை என்பர். இதனால், இது கிரகதோஷம் நீக்கும் தலமாக உள்ளது.போன்: 98424 04554.

மேற்கு நோக்கிய குரு: சென்னை பாடியில் (திருவலிதாயம்) உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்டதாகும்.குருபகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சந்நிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. போன்: 044 2654 0706.

ஒரே ஊரில் ஏழு குருக்கள்: குருவைப் பற்றிய ஸ்ரீகாண்டேயா என்ற ஸ்லோகம், தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தெட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோயிலில் தரிசிக்கலாம். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தருகின்றனர். குருவின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பெயர்ச்சியால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். போன்: 0431 259 1466.

பெருமாளுக்கு மஞ்சள் வஸ்திரம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதப்பெருமாள் கோயில் குருவிற்கு உரியது. இங்கு பெருமாள், வியாழன் கிரகத்திற்கு அதிபதியாக அருளுகிறார். பொதுவாக, தெட்சிணாமூர்த்திக்குத்தான் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை (சுண்டல்) மாலை அணிவித்து வழிபடுவர். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு வழிபாட்டைச் செய்கின்றனர். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது விசேஷம். போன்: 04639 273 607.

தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை: தேனி வேதபுரியில் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி ஒன்பதடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்கள் கோயில் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுவாமிக்கு சக்தி அதிகம். கருவறை விமானத்தில் நமசிவாய மந்திரத்தை குறிக்கும் வகையில் ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு வில்வமாலை அணிவிக்கிறார்கள். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.  போன்: 04546 253 908

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

குருப்பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், மகரம்
பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம்
குரு ஸ்லோகம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.
குரு காயத்ரி
விருஷபத்வஜாய வித்மஹே
கருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
குருவை அறிவோம்
சொந்த வீடு:  தனுசு, மீனம்
உச்ச ராசி:   கடகம்
நீச்ச ராசி:   மகரம்
திசை:   வடக்கு
அதிதேவதை:   பிரம்மா
நிறம்:   பொன்னிறம்
வாகனம்:   யானை
தானியம்:   கொண்டைக்கடலை
மலர்:   வெண்முல்லை
வஸ்திரம்:   மஞ்சள் ஆடை
ரத்தினம்:   புஷ்பராகம்
நிவேதனம்:   கடலைப்பொடி சாதம்
உலோகம்:   தங்கம்
இனம்:   ஆண்
உறுப்பு:   தசை
நட்பு கிரகம் :  சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம்:   புதன், சுக்கிரன்
மனைவி :  தாரை
பிள்ளைகள்:   பரத்வாஜர், கசன்
வழிபாட்டுதலம்:  ஆலங்குடி (திருவாரூர்
  மாவட்டம்), திருச்செந்தூர்
தகுதி :  ராஜகிரகம்
வழிபட்டால் கிடைக்கும் பலன்:  நல்ல பிள்ளைகள், கல்வியறிவு, கவுரவம்.