நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள்
செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். ஓஷதீநாம் பதி: என்று
சந்திரனுக்குப் பெயருண்டு. இதற்கு தாவரங்களின் தலைவன் என்று பொருள்.
நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய
நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.
பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம்,
நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை
உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.
No comments:
Post a Comment