மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனிச்சிறப்பு
உண்டு. இதில், 152 அடி உயரம் உள்ள வடக்கு கோபுரம் மொட்டை கோபுரம்
என்றழைக்கப்படுகிறது என்றால் ஆச்சரியம் தானே. இதன் பின்னணி இன்னும்
சுவராஸ்யம்... ஒன்பது நிலைகளை கொண்ட இக்கோபுரத்தை, 1564-72ல், கிருஷ்ண
வீரப்ப நாயக்கர் கட்டினார். ஆனால், என்ன காரணத்தினாலோ, மேற்பூச்சுஇன்றி,
முழுமை பெறாமல் நின்று விட்டது. பின், 1623ல், இக்கோபுரம் முழுமை பெற்றது.
நீண்ட நாட்கள் மேற்பூச்சின்றி இருந்ததால், மொட்டைக்கோபுரம்
என்றழைக்கப்பட்டது. இன்றும், இச்சொல் வழக்கில் உள்ளது. கோபுர வாசலில்
அமைந்துள்ள முனியாண்டி கோயிலும் மொட்டைக் கோபுரம் அடைமொழியுடன்
அழைக்கப்படுகிறது. வடக்கு கோபுரத்தின் அகலம் 66 அடி. 404 சுதைகளே உள்ளன.
மற்ற கோபுரங்களைவிட, சுதைகள் குறைவாக உள்ளதாலும் மொட்டைக்கோபுரம்
என்றுஅழைப்பதாக கூறுகின்றனர். 1960-63ல் நடந்த திருப்பணியின் போது,
கடைசியாக இக்கோபுரத்தில் தான் திருப்பணி முடிக்கப்பட்டது. இக்கோபுர வாசல்
வழியாக, இடது புறம் சென்றால், இசைத்தூண்கள் நம்மை வரவேற்கும் என்பதால்,
வேறு எந்த கோபுரத்திற்கும் இல்லாத பெருமை இக்கோபுரத்திற்கு உண்டு என்றால்
அது மிகையில்லை
No comments:
Post a Comment