Sunday, December 30, 2012

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!.. எவை தெரியுமா?

மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;
2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;
4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;
7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.

Saturday, December 29, 2012

இறைவனின் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

வெளிச்சமான பகுதியில் வெளிச்சத்தைப் பார்ப்பது அவ்வளவு சந்தோஷம் தராது. ஒரு கோயில் திருவிழா நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நம் மனம் அலங்கரிக்கப்பட்ட பூக்களையும், மாலைகளையும், வண்ண விளக்குகளையும் காண்பதிலேயே மனம் லயித்திருக்கும். கச்சேரிகள், பாட்டுகள் என அமர்க்களப்பட்டு போயிருப்போம். ஆனால் இருட்டாக இருக்கின்ற கருவறையில் எண்ணெய் தடவிய அந்த கருங்கல் சிலைக்கு முன்பு கற்பூர ஆரத்தியோ அல்லது நெய் விளக்கோ காட்டுகிற பொழுது கண்கள் பளபளக்க உதடுகள் மினுமினுக்க அதனுடைய உயரமும் அகலமும் தெரியவர, நம் கண்ணுக்குள் தனியாக அந்த உருவம் காட்சியளிக்கிறது. இருட்டில் ஒளியை தரிசிப்பது என்பது இன்னும் நெருக்கமாக மனதை அங்கு கொண்டு போய் வைக்கிறது. நம் முன்னோர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். எதனால் உங்கள் மனம் ஒன்றாகக்கூடும் என்பதை நன்றாக கவனித்து உங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

எந்தப்பெண்களின் பேச்சை கேட்கக்கூடாது!

தையல்சொற் கேளேல் என்பது ஆத்திச்சூடி. அவ்வையாரே பெண்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று சொல்லியிருப்பது ஏன்? தையல் என்பதற்கு தன்னைப் பிறர் காணும் வண்ணம் அலங்கரித்துக் கொள்பவர் என்பது பொருள். அத்தகையவர்கள் நன்மகளிர் ஆகார். கந்தபுராணத்தில் மணந்து கொள்ளும் தகுதியற்ற பெண்கள் இன்னார் என்று ஒரு பட்டியல் வருகிறது. அதில், நலம்பெறப் புனைகின்றோர் என்று இருக்கிறது. தம்மைப் பிறர் காணும்படி அணி செய்துகொள்பவர்களை மணம் புரியலாகா மகளிர் என்று விலக்கியிருப்பார். அத்தகையோரின் சொற்களைத்தான் கேட்கக்கூடாது. நன்மகளிர் சொல்லை எப்போதும் கேட்கலாம்!

Thursday, December 27, 2012

விஞ்ஞானம் வெற்றி தான்! ஆனால் மெய்ஞ்ஞானம்..!

மனிதன் விஞ்ஞானத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறான். உலகத்தின் எல்லையை விட்டு சந்திர மண்டலம், செவ்வாய் கிரகம் என அவன் சாதித்தவை அனைத்தும் மிக மிக பாராட்டுக்குரியவை. தனது அறிவைப் பயன்படுத்தி அவன் இதைச் சாதித்திருக் கிறான். ஆனால், இந்த சாதனைக்காக அவன் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதையும், கடவுளை வென்று விட்டதாக கூறுவதையும் ஒப்புக்கொள்ள முடியாது. காரணம், வெறும் குதிரையும், யானையும் படைகளாக இருந்த காலத்தில் அவற்றை அடக்க பீரங்கியைக் கண்டுபிடித்தான். பீரங்கியை அடக்க வெடிகுண்டுகளை தயாரித்தான். சாதாரண குண்டுகளைத் தகர்க்க அணுகுண்டை கொண்டு வந்தான். காட்டையும் ஆற்றையும் விளைநிலங்களையும் அழித்து செயற்கை உணவு வகைகளை அவன் தயாரித்ததும், நோய்கள் கடுமையாகத் தாக்கின. ஆக, மனித அறிவு கடைசியில் அழிவைத் தான் தந்தது. மெய்ஞ்ஞானம் அப்படியல்ல! அது அன்பைப் போதிக்கிறது. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நமக்கு அளித்துள்ளதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வினை உண்டாக்குகிறது. அக்கால மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். அதனால் அவர்களுக்கு பிரச்னைகள் மிகக்குறைவாக இருந்தது. எனவே, மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானம் வென்றுவிட்டதாகக் கூறுவதை எக்காலமும் ஏற்கமுடியாது.

குழந்தை அழுகையின் குவா குவாவிற்கு என்ன அர்த்தம்?

ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலே உருவானது. அதன் மனதில் பெருமாள் மறைந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டது. உடனே ஓவென்று அழுதபடியே,பெருமாளே! ரங்கா! ஏன் என்னை மீண்டும் பூமியில் பிறக்கச்செய்யப் போகிறாய்? இதுவரை எடுத்த பிறவிகளில் நான் பட்டது போதாதா? என்றது.பட்டேன்.. பட்டேன் என்கிறாயே? அந்த பாடுகளை எல்லாம் நானா தந்தேன்! நீயே இழுத்துக்கொண்டது தானே! போபோ! நீ துவங்கியதை நீதான் முடித்து வைக்க வேண்டும்! என்று பெருமாள் பதில் சொல்லவும், தாய்க்கு பிரசவவலி ஏற்பட குழந்தை பூமிக்கு வந்து விட்டது. அதுவரை, அதன் கண்களுக்கு தெரிந்த பெருமாள் இப்போது தெரியவில்லை. க்வா க்வா என்று அழ ஆரம்பித்து விட்டது. க்வா க்வா என்றால், எங்கே எங்கே என்று அர்த்தம். இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனை எங்கே? என்று அழ ஆரம்பித்து விட்டதாம் குழந்தை. க்வா க்வா என்பது தான் இப்போது குவா குவா ஆகியிருக்கிறது. மீண்டும் க்வா க்வா போடாமல், பரமபதத்திலேயே தங்க வேண்டுமானால், நம் கண்களில் நல்லது மட்டுமே படட்டும். சரி தானே!

இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?

இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்.

பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?

பெண்குழந்தைக்கு ஏழுவயதுக்குள் முடியிறக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி விட வேண்டும். முடியாத பட்சத்தில் ஒன்பது வயதுவரை செய்யலாம். அதற்குப்பிறகு பெண்கள் முடியிறக்குவது கூடாது. அதுவும் திருமணமான பெண்கள், சுமங்கலிகள் என்ற பெயர் பெற்று விடுவதால் கண்டிப்பாக முடியிறக்கக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகிறது

கண்திருஷ்டி உண்மையா?

உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு கண். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லக் காரணம் கண்கள் தான். நேர்மையானவர்கள் மற்றவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவர். ஆனால், பொய் சொல்பவர்கள் நேருக்கு நேர் பேசத் தயங்குவர். அன்பு, கருணை, பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியே மற்றவருக்குப் பரவுகின்றன. இதில் மற்றவரைப் பெரிதும் பாதிப்பது பொறாமை. அதையே கண்திருஷ்டி என்கிறார்கள்.

Monday, December 24, 2012

விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்?

மாலை நேரம் வழிபாட்டுக்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பைத்தரும் என கூறுகின்றனர் சான்றோர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் மொட்டை கோபுரத்தின் ரகசியம்!

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. இதில், 152 அடி உயரம் உள்ள வடக்கு கோபுரம் மொட்டை கோபுரம் என்றழைக்கப்படுகிறது என்றால் ஆச்சரியம் தானே. இதன் பின்னணி இன்னும்  சுவராஸ்யம்... ஒன்பது நிலைகளை கொண்ட இக்கோபுரத்தை, 1564-72ல், கிருஷ்ண வீரப்ப நாயக்கர் கட்டினார். ஆனால், என்ன காரணத்தினாலோ, மேற்பூச்சுஇன்றி, முழுமை பெறாமல் நின்று விட்டது. பின், 1623ல், இக்கோபுரம் முழுமை பெற்றது. நீண்ட நாட்கள் மேற்பூச்சின்றி இருந்ததால், மொட்டைக்கோபுரம் என்றழைக்கப்பட்டது. இன்றும், இச்சொல் வழக்கில் உள்ளது. கோபுர வாசலில் அமைந்துள்ள முனியாண்டி கோயிலும் மொட்டைக் கோபுரம் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. வடக்கு கோபுரத்தின் அகலம் 66 அடி. 404 சுதைகளே உள்ளன. மற்ற கோபுரங்களைவிட, சுதைகள் குறைவாக உள்ளதாலும் மொட்டைக்கோபுரம் என்றுஅழைப்பதாக கூறுகின்றனர். 1960-63ல் நடந்த திருப்பணியின் போது, கடைசியாக இக்கோபுரத்தில் தான் திருப்பணி முடிக்கப்பட்டது. இக்கோபுர வாசல் வழியாக, இடது புறம் சென்றால், இசைத்தூண்கள் நம்மை வரவேற்கும் என்பதால், வேறு எந்த கோபுரத்திற்கும் இல்லாத பெருமை இக்கோபுரத்திற்கு உண்டு என்றால் அது மிகையில்லை

மார்கழி வழிபாடும் அதன் சிறப்பும்!


மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.

சித்தர்களில் இடைக்காடரின் சிறப்பு!

சித்தர்கள் என்பவர் சிவத்தை கண்டவர்கள் சுத்த, அசுத்த மாயைகளால் தீண்டப் பட்டாலும், எதனாலும் கரைபடாமல் முக்தி அடைந்தவர்கள் எனப் போற்றப்பட்டனர்.

சித்தர்கள் யார்?
அகத்திய மகரிஷியின் கூற்றுப்படி சித்தன் என்பவன், மூலமதை யறிந்தக்கால் யோகமச்சு முறைமையுடன் கண்டக்கால் வாத மச்சு சாலமுடன் கண்டவர் முன் வசியமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன். (நூல் - அகத்தியர் பரிபாஷை)

தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கோடி சித்தர்களில் பதினெட்டு சித்தர்கள் மிக முக்கியமாக போற்றப்படுகின்றனர். அதில் இடைக்காட்டுச் சித்தர் மிகக் குறிப்பிடத்தக்கவர். ஏனென்றால் அவர் அகத்திய மகரிஷியை மகா சித்தர் என்றும் பெரும் சித்தர் என்றும் அவருடைய குரு போக மகரிஷியால் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஏனைய சித்தர்கள் கலியுகத்தில் மனிதன் படும் துன்பங்கள் நீங்க வழிகளை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை கூறினார்கள். ஆனால் இடைக்காட்டூர் சித்தர் மட்டும் உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறினார்.

இடைக்காடர் வாழ்க்கை - அவதாரம் தலம்: இடைக்காடர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு என்னும் ஊரில் இடையர் குலத்தில் நந்த கோனார் மற்றும் யசோதா தம்பதியினர்க்கு மகனாக பிறந்தார். இந்த ஊரானது தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இடைக்காடரின் பிறப்பைப் பற்றி போகர் மகரிஷி தனது சிஷ்யர் புலிப்பாணி சித்தரிடம் பாடிய பாடல்.
மட்டான இடைக்காடர் ஜாதி பேதம்
மகத்தான கோனாரே என்னலாகும்
திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும்
திகழான நூலதனில் கண்ட மட்டும்
காலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை
சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மை பாரே
தன்மையாம் புரட்டாசி மாதமப்பா
தாழ்வாக இரணியனைக் கொன்ற
வன்மையாம் திருவாதிரை இரண்டாம் காலம்
வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன் தானே

- போக முனிவர் 7000 நூல்

இடைக்காடர் ஞானஸ்தலம்: தற்பொழுது சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூராகும். பழங்காலத்தில் இவ்வூர் அழகிய பாண்டிய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. இடைக்காடரின் சித்துகளாலும், அற்புதங்களாலும் இவ்வூரை பொது மக்களாலும், சிஷ்யர்களாலும் இவ்வூரை இடைக்காட்டூர் என்று அவர் பெயரில் அழைக்கப்பட்டது.
இடைக்காடர் பிறவியிலேயே ஞானம் கைவரப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தினார். இடைக்காடர் தனது குல தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை செய்தாலும் அவரது சிந்தனைகள் அனைத்தும் ஆத்மாவை நோக்கி விண்வெளியில் ஒன்றர கலந்திருப்பார். இவ்வாறு இவரின் தவக்கோலத்தில் விண்நோக்கி அமர்ந்திருப்பை வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போக மகரிஷி இவரை காணும் ஆர்வத்துடன் இவர் முன்வந்து காட்சியளித்தார். இதனையும் வந்திருப்பவர் போகர் என்பதை அறியாமல் இடைக்காடர் அவரை வணங்கி அங்கிருந்த தர்ப்பை புல்லை சேகரித்து ஆசனமாக செய்து அவரை அமரச் செய்து ஆட்டின் பாலை கறந்து கொடுத்து உபசரித்தார். இவரின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு மகிழ்ந்து போகர் இவரை தனது சீடனாக்கி அவருக்கு ஞானம், மருத்துவம் மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றை பல நாட்கள் அங்கு தங்கிருந்து உபதேசித்து அருள்பாலித்தார்.

சில காலம் பின்பு போகர் அவரை விட்டு விடைபெறும் நேரம் வந்த பொழுது இடைக்காடர் கண் கலங்கினார். அப்பொழுது இடைக்காடருக்கு கலங்காதே உனக்கு அருளிய ஞானத்தை வைத்து உலகம் உய்ய வாழ்விக்க அருள்வாயாக என்று கூறி மறைந்தார். இவ்வாறு போகரின் அருளால் ஞானம் பெற்ற இடைக்காடர் தனது தவத்தாலும், ஞானத்தாலும் முக்காலத்தை உணர்ந்தார். தனது குருவின் சொல்படி மக்களுக்கு சேவை செய்ய உறுதி பூண்டார். அதன் பொருட்டு பல ஞானநூல்கள் எழுதினார். மனிதனின் துயரங்கள் அடிப்படையாக விளங்குவது மற்றும் நிலைக்களுக்கும் காலம் செயல்படுவதை கண்டறிந்து அதனை விளக்கு விதமான வருஷாதி என்னும் நூலை இயற்றினார். இப்பொழுது பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.
இவர் தனது ஞான சிருஷ்டியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் கொடுமையான பருவ மாற்றத்தையும், அதனால் ஏற்படப் போகும் பஞ்சம், பசி மற்றும் பட்டினியை உணர்ந்து தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் எச்சரித்தார். ஆனால், அவர்களோ அதனை பொருட்படுத்தவில்லை. இருப்பினும், அவர் தன் பொருட்டு பட்டினியிலிருந்து தனது ஆடுகளை காக்க, எந்த பருவ மாற்றத்திலும் பாதிப்படையாமல் வளரும் எருக்கஞ் செடியை உணவாக கொடுத்தார். இதனை கண்ட மக்கள் இவருக்கு சித்தம் கலங்கிவிட்டது என்று எள்ளி நகையாடினர். ஆனால் இடைக்காடரோ தனக்கும் உணவு கிடைக்க, குறுந்தானியமான குருவரகு எடுத்து வந்து அதனை மண்ணில் சேற்றோடு கலந்து அவர் குடிலில் மண்சுவர் எழுப்பினார். இதன்மூலம், எருக்கஞ் செடியை உண்ணும் ஆடுகளுக்கு உடலில் தினமும் ஏற்படும் அரிப்பை போக்க மண் சுவர்களில் உடம்பை தேய்க்கும். அதன் மூலம் பஞ்ச காலகட்டத்தில் அதனை உணவாக வைத்து கொள்ளலாம் என எண்ணினார். அவர் எண்ணியபடியே, மக்களும் பஞ்சத்தினாலும், பட்டினியாலும் இறக்கத் தொடங்கினர். ஆனால் இடைக்காடரும் அவரது ஆடுகளுடன் எப்பொழுது போல் எவ்வித பாதிப்பின்றி நன்றாக உயிர் வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த நவக்கிரக நாயகர்கள் ஆச்சர்யம் அடைந்து அதனை கண்ணூற காண விரும்பி இடைக்காடரின் மண்குடிலுக்கு வந்து சேர்ந்தனர்.

உலகையே ஆட்சி செய்கின்ற நவக்கிரக நாயகர்கள் தனது குடிசைக்கு வந்தமைக்கு இடைக்காடர் பெரும் மகிழ்ச்சியுடன் திகைத்து நின்று அவர்களை வரவேற்றார். அவர்களுக்கு ஆட்டுப் பாலுடன், குருவரகு கஞ்சியும் கொடுத்து உபசரித்தார். அவரின் உபசரிப்புக்கு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள் அவருக்காக உண்டனர். பின்னர் எருக்கஞ்செடிகளை தின்ற ஆடுகளின் பாலின் காரணமாக அதனை உண்ட அவர்கள் மயக்கமுற்று படுத்துறங்கினர். இதனை கண்ட இடைக்காடருக்கு சற்று ஒரு யோசனை தோன்றியது. நவக்கிரகங்களின் வேறுபட்ட நிலைகளால் தானே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் உறங்கி கொண்டிருந்த நவக்கிரக நாயகர்களை பஞ்சம் நீக்குகின்ற ஒரு நிலையில் இடமாற்றி படுக்க வைத்தார். இதன்மூலம், அடுத்த கணமே, பூமியில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. மேகங்கள் சூழ்ந்தது பெரும் மழை பெய்தது பூமி குளிர்ந்தது வறட்சி நீங்க நீர் நிலைகள் மற்றும் குளங்கள் நிரம்பின. அனைத்து ஜீவராசிகளும், மனிதர்களும் மலர்ச்சியுடன் உயிர் பெற்றன. பஞ்சம் நீங்கியது.
பூமியில் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சியையும் மாற்றத்தையும் உணர்ந்த நவக்கிரக நாயகர்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தனர். இது அனைத்தும் இடைக்காடரின் செயலாகத்தான் இருக்கும் என்று உணர்ந்து அவர்கள் அவரின் நுட்பத்தினையும், சகல உயிர்கள் மேல் அவர் கொண்ட அன்பையும் நினைத்து நெகிழ்ந்தனர். அதே நேரத்தில் இடைக்காடரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருப்பதை பார்த்த அவர்கள் அவரை தொந்தரவு செய்ய மனமின்றி வாழ்த்தி இவரால் பூலோக மக்களுக்கு நன்மைகள் நிகழட்டும் என்று ஆசி வழங்கி மறைந்தனர்.

முக்திஸ்தலம்: இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி நிலை அடைந்தார்.

ஆன்மீக பணி : சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் சித்தரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை அன்று அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று சித்தருக்கு குரு பூஜையும் மாபெரும் அன்னதானமும் சீரும் சிறப்பாக ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்திரம் மூலம் நடைபெறுகிறது.

இருப்பிடம்: மதுரை டூ பரமக்குடி சாலையில் முத்தணேந்தல் என்ற ஊரின் அருகே உள்ளது. (மதுரையிலிருந்து 39 கிலோ மீட்டர்)
வழித்தடம் : மதுரையில் பெரியார் நிலையம் டூ இடைக்காட்டூர். பேருந்து எண் : 99 எப்

குரு வணக்கம்: 

ஆதியாம் சப்தரிஷி மார்களோடு அருள் பூண்ட
பதினென்பேர் பாதம் போற்றி!
சேதியாம் மூத்ததொரு முனிவர் மூதோர்
செப்பரிய பெரியோர்கள் சுகந்தாள் போற்றி!
நீதியாம் ரவியோடு மதியும் தேவர் நிலையான
மூவருடன் இணைகள் போற்றி!
ஜோதியென சென்னிமீது உரையும் கலைகள்
ஓதுவித்த குருவடிகள் போற்றி! போற்றி!

ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச் செய்யுள்:

ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைக்களுக்கருளிய கோனார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே! மண்சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!
பாடல் : மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முக்தி
வாய்த்தது என்று எண்ணோடா தாண்டவக்கோனே
விளக்கம் : கட்டுக்கடங்காமல் இருக்கும் மனம் என்ற மாட்டை கட்டுப்படுத்தி விட்டால் முக்தி கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்.
பாடல் : சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே
விளக்கம் : கோபம், வெகுளி, ஆத்திரம் என்று சொல்லப்படும் நச்சும்பாம்பை அடக்கி உள்ளத்திலிருந்து விரட்டி அடித்து விட்டால் சித்தி கிடைக்கும்.
பாடல் : தேவன் உதவியின்றி பசுவே! தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே
விளக்கம் : உயிரே ! பரம்பொருளின் துணையின்றி நீ வாழ்ந்து காட்ட முடியாது. உயிருக்கு உயிராய் இருப்பது பரம்பொருளின் அருள்தான் என்பதை மறவாதே!

பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எப்படி வணங்க வேண்டும்?

மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி பலன் பெறுவது என்பது பற்றி பார்ப்போமே!. சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலில் உள்ள அமிர்தத்தை பெற வேண்டி "வடவரை என்னும் மந்திர மலையை மத்தாகவும், "வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் வைத்து திருப்பாற்கடலை கடைந்தனர். இந்நிகழ்ச்சியை சிலப்பதிகாரமும், ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் ""வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பண்டொரு நாள் கடல் வயறு கலக்கினையே என கூறுகிறது.

தேவர்களும், அசுரர்களும் திருபாற்கடலை கடைய துவங்கியதும் வேதனை தாளாத வாசுகி நாகம் விஷத்தை கக்கியதால் வெளியே வந்த ஆலகால விஷம் தேவர்கள், அசுரர்களை நெருங்க அதன் வெப்பம் தாங்காத அனைவரும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமான் சக்தியுடன் நந்தி பகவானின் இரண்டு கொண்டுகளில் நடுவே பிரன்னமாகி எங்கும் பரவியிருந்த விஷத்தை உளுந்து அளவாக்கி அனைவரையும் காப்பாற்றுவதற்காக ஆலகால விஷத்தை தான் உண்டார். அதுகண்டு பயந்து நின்ற பார்வதிதேவியும் இறைவனுக்கு விஷத்தால் ஏதும் இன்னல்கள் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி சிவபெருமானது கண்டத்தில் (கழுத்தில்) தன் கையை வைத்து அவ்விஷத்தை கழுத்திலேயே நிலைத்திருக்க செய்தார். இதனால் ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்து பகுதியிலேயே தேங்கி நின்று நீலகண்டம் ஆயிற்று. நஞ்சுண்டு இருந்ததால் நஞ்சுண்டவன் என சிவன் அழைக்கப்படுகிறார். ""பெயர்தக்க நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என வள்ளுவர் குறிப்பிட்டது போல நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை "பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது "சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு "ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

Thursday, December 6, 2012

காளிக்கு ஜெபிக்கும் மந்திரம்

காளிக்குரிய எளிய மந்திரம் ஓம்காளி. தினமும் விளக்கேற்றி 108 முறை ஜெபியுங்கள். தொடர்ந்து 48 நாட்கள் ஜெபிப்பது நல்லது. எதிரிதொல்லை, தேவையற்ற பயம் நீங்கவும், எடுத்து கொண்ட முயற்சியில் வெற்றி பெறவும் உகந்த வழிபாடு இது.

கலசத்தை பூஜிப்பது ஏன்?

கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது. மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.

பூஜிப்பது ஏன்? உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான -எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.

Saturday, December 1, 2012

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

மகா கணபதி தியான ஸ்லோகம்

மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:
ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

சாஸ்தா காயத்ரீ

ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ

ஓம் பூதாதி பாய வித் மஹே
மஹா தேவாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்

ஐயப்பன் மகா மந்திரம்
 பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ


ஐயப்பன் ஸுப்ரபாதம்
1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு
2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
பவது ப்ரஸன்ன மனன சுந்தர
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
காந்தகிரி குஸுமானி மனோஹரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்
10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்
11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்
12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்
13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
ஆனந்த பூத அனாத நர்த
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்
14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.
15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.
16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்
சாஸ்த்ர ஸுப்ரபாதம்
1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்
2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்
4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

சாஸ்தா சதகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்
1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
(சுவாமியே சரணம் ஐயப்பா)
10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே
(சுவாமியே சரணம் ஐயப்பா)
மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்
ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம
ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம
ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம
ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம
ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம
ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம
ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம
ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம
ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம
ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம
ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம
ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம
ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம
ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம
ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம
ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம
ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம
ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம
ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
ஓம் ஹரிஹராத்மஜாய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
ஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம்
1. ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய
2. ஓம் புத்ர லாபாய
3. ஓம் மஹா சாஸ்த்ரேய
4. ஓம் சத்ரு நாச நாய
5. ஓம் மத கஜ வாகனாய
6. ஓம் பிரதயட்ச சூலாயுதாய
7. ஓம் வர வரத சர்வ ஜனமே
8. ஓம் வசமான ய ஸ்வாஹா
9. ஓம் சாஸ்த்று ஸ்ரீ பாபு ஜயாமி நமக
தற்பயாமி நமக
ஸ்ரீ சபரிகிரி வாசன் ஸ்தோத்திரம்
த்யானச் லோகம்

ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்

ஸ்ரீ மஹா ஸா ஸ்தாமாலா மந்த்ரம்

1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக


ஐயப்ப விரத முறைகள்!

கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.

2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.
3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.
4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு  கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது.   அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி  கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.
6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.
7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.
13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.
14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.
15. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.
16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.
17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.
18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.
19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.
21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.
22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.
23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து  ஐயப்பன்  திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை:
1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.
3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.
4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.
6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.
7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.
8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.
9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.
10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.
11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.
12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.
13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.