Thursday, September 27, 2012

துர்க்கா ஸ்துதி (ராகுகாலத்திற்குரியது) - மூலமந்திரம்

ஸ்ரீ மங்கள சண்டிக ஸ்தோத்ரம்

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே

மங்களத்திற்கு ஆதாரமானவளே ! மங்கள வாரம் தோறும் (செவ்வாய்க்கிழமை தோறும்) பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.

தேவீம் ÷ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்

தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்

காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே

பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

மங்களத்தை தரும் மங்கள நாயகியே !
என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி

மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே ! மாந்தருக்கு மோக்ஷத்தை அளிப்பவளே !

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே

மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

பலஸ்ருதி

ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ

மங்கள சண்டிகையான அன்னையை மங்கள வாரம் தோறும் ராகு காலத்தில் பூஜித்து துதித்தால் சகலநன்மைகளையும் அளிப்பாள்.

தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித
தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே

தேவியைப் போற்றும் இந்த மங்கள ஸ்துதியை ஓதுவதால் உலகில் கிடைக்காத பாக்கியமே இல்லை, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும் எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.

பவானி த்வம் தாஸேமயீ விதிர க்ருஷ்டியும் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதிபவானி த்வமிதிய:
தவைத த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதாம்

ஹே பவானி அடிமையாகிய என்னிடம் கருணையுடன் கூடிய பார்வையை நீ செலுத்தி அருள்வாயாக என்று எவனொருவன் துதிசெய்ய விரும்பி பவானி நீ என்ற இரண்டு வார்த்தைகளை சொன்ன மாத்திரம் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நிராஜனம் செய்ய பெற்ற திருவடிகளையுடைய உனது ஸாயுஜ்ய பதவியை அவனுக்கு அளிக்கிறாய்.

பன்னிரு ராசி நேயர்கள்  ராகு தோஷம் நீக்கி ஸ்ரீதுர்கையின் அருள் கிடைக்க திருநாமம்

ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் ஜெயப்ரதாம் ஓம்

(தன, ஸித்தி, ஞான, ஸஹாய குணயோக போக, மோக்ஷ என மாற்றியும் சொல்லலாம்)

மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை ஸ்வாஹா ஓம்

No comments:

Post a Comment