இது இயந்திர உலகம். எங்கும் அவசரம். எதிலும் அவசரம். இந்த உலகில் கடவுளை
வணங்க நேரம் இல்லை. ஆனால் அவரின் திருவருள் மட்டும் வேண்டும் என்று
கேட்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்காமல்
இருக்கிறோமா? உறங்குவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? குளிக்க நேரம்
ஒதுக்காமல் இருக்கிறோமா? இதெற்கெல்லாம் நேரம் ஒதுக்கும் நாம் நம்முள்
இருக்கும், நம்மை வழிநடத்தி செல்லும் இறைவனை வணங்குவதற்கு நேரம் இல்லை
என்கிறோம். சரி. இறைவன் மாபெரும் சக்தி. அவரை நேரம் ஒதுக்கித்தான் வழிபட
வேண்டும் என அவர் நினைப்பதில்லை. அவர் நம்முள் இருக்கிறார். அவர்தான் நம்மை
வழிநடத்தி செல்கிறார் என்ற நினைவுடன் ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும்.
அப்படி செய்ய ஆரம்பித்தால் அனைத்தும் நாம் தான் செய்கிறோம். எல்லாம்
என்னால் தான் நடக்கிறது என்ற அகங்காரம் விலகி, இறைவனின் கருணை கிடைத்து
விடும். ஒன்பது வகை இறைவனின் வழிபாட்டில் நினைப்பு (ஸமரணம்) சிறந்த
வழிபாடாகும்.
No comments:
Post a Comment